பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypokalaemia

556

hypophonia


hypokalaemia : பொட்டாசியம் குறைபாடு : குருதியில் பொட்டாசியம் அளவு மிகமிகக் குறைந்து விடுதல்.

hypomagnesaemia : மக்னீசியம் குறைபாடு : குருதியில் மக்னீசியம் குறைந்து விடுதல்.

hypomania : கிளர்ச்சிக் குறைபாடு : நடத்தை முறையில் மிதமான மாறுதலுடன் ஏற்படும் இலேசான கிளர்ச்சி.

hypomere : இடைத்தோல் : 1. தசை வெட்டுப் பகுதியின் இடைமட்டப் பகுதி. இது தண்டுவட நரம்பின் முன்புறக் கிளை ஒன்றினால் தூண்டப்படும் உடல் சுவர் தசையாக அமைகிறது. 2. உடலின் உட் குழிவுகளுக்கு உள்வரிப்பூச் சினைக் கொடுக்கும் இடை மிட்ட இடைத்தோல்.

hypometabolism : உடல் வெப்பம் குறைதல், தாழ்வளர் சிதை மாற்றம் :மந்திப்புக் கோளாறு காரணமாக உடலில் வெப்பம் குறைவாக உற்பத்தியாதல்.

hypometria : தள்ளாட்டம் : ஒரு பொருளை அடைய அல்லது ஒரு குறிக்கோளை எட்டத் தவறுவதால் உறுப்புகள் ஒத்தியங்காமல் ஏற்படும் தள்ளாட்டம்.

hypomorph : குள்ளக்கால் மனிதன் : உடலின் நீளத்துடன் ஒப்பிடும்போது கால்களின் வீதஅளவு குறைவாக இருக்கும் ஒரு மனிதர்.

hypomotility : இயக்கக் குறைபாடு; குறையசைவு : இரைப்பையில் அல்லது குடல்களில் இயக்கம் குறைவாக இருத்தல்.

hyponatraemia : சோடியம் குறைபாடு : இரத்தத்தில் சோடியம் குறைவாக இருத்தல்.

hyponeocytosis : இடதுபுற விலகல் : இடதுபுறம் இடம்பெயர்ந் திருத்தல். இதில் வெள்ளணுக் குறைபாட்டுடன் வெளிக் குருதியில் இளம் மற்றும் முதிரா ஊனீர் நுண்மங்கள் இருப்பது தொடர்புடையதாகும்.

hyponychium : நகமேல்திசு : நகப்படுகையில், குறிப்பாகப் பின்புறப் பகுதியில் உள்ள மேல்திசு.

hypoorthocytosis : இயல்பளவு வெள்ளணு : வெள்ளையணுப் பெருக்கத்தில் வேறுவகை வெள்ளணுக்கள் இயல்பான அளவில் இருத்தல்.

hypopharynx : அடிக் குரல்வளை; அடித்தொண்டை : குரல்வளைக்குக் கீழே, குரல்வளையின் பின்புறமுள்ள குரல்வளையின் பகுதி.

hypophonia : குரல் தாழ்வு : சுவாசத்தசைகள் நலிந்திருத்தல் போன்ற தொண்டைத் தசைகள் ஒருங்கிணைந்து இயங்காமலிருக்கும்போது குரல் குறைந்திருத்தல்.