பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypoporosis

557

hypoplasia


hypoporosis : தோல்காய்ப்புக் குறைபாடு : எலும்பு முறிவு ஏற்பட் டுள்ள இடத்தில் தோல்காய்ப்பு போதிய அளவு இல்லாதிருத்தல்.

hypoprosody : குரல் மார்றக் குறைபாடு : பேசும்போது அழுத்தம், தூக்கல், ஒத்திசைவு குறைந்த அளவு மாற்றத்துடன் இருத்தல்.

hypospadias : வழிக் கீழ்த்துளை.

hyposthenuria : சிறுநீர் ஒழுக்கு : சிறுநீரை ஒரு முகப்படுத்த இயலாதிருத்தல்.

hypothalamic-pituitary axis : மூளை கீழ்த்தள-கபச் சுரப்பி அச்சு : மூளையின் கீழ்த்தளம், கபச்சுரப்பி இரண்டின் நடவடிக்கைகளையும் ஒருங்கி ணைக்கும் பின்னூட்ட மண்டலங்களின் ஒரு தொகுதி. மூளையின் கீழ்த்தளம், கபச் சுரப்பியின் மீது செயற்படும் இயக்கு நீர்களை வெளியிட்டு ஒருங்கிணைக்கிறது. இதனால், அண்ணீரகச் சுரப்பி, கேடயச் சுரப்பி, ஈனுறுப்புகள், மார்பகம் ஆகியவற்றில் முனை உறுப்புத் துலங்கல் ஏற்படுகின்றன. இயக்குநீர் உடலுயிர் அச்சு வளர்வதற்கும் இது உதவுகிறது.

hypothemar : உள்ளங்கைத் தசைத் திரட்சி : உள்ளங்கையின் முன்கை எலும்புப் பக்கத்தின் தசைத் திரட்சி.

hypothermia : ஆழ் உறை நிலை மருத்துவ முறை : ஒரு நோயா ளியை இயல்பான உடல் வெப்ப நிலையிலிருந்து பல பாகைகள் குறைந்த குளிர்ந்த வெப்ப நிலையில் வைத்திருந்து நோயைக் குணமாக்கும் ஆழ்ந்த உறை நிலை மருத்துவ முறை.

hypophoria : காட்சி அச்சு முரண் தாழச்சு : ஒரு கண்ணிலுள்ள காட்சி அச்சு மற்றொன்றை விடக் கீழே இருக்கும் நிலை.

hypophosphataemia : ஃபாஸ்ஃபேட் குறைபாடு : இரத்தத்தில் ஃபாஸ்ஃபேட்டுகள் குறைவாக இருத்தல்.

hypophysectomy : கபச்சுரப்பி அறுவை மருத்துவம் : கபச்சுரப்பியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றதல்.

hypopigmentation : நிறமிக் குறைபாடு; தாழ் நிறமேற்றம் : நிறமி குறைந்த அளவில் இருத்தல்.

hypo pituitarism : கபச்சுரப்பிக் குறைபாடு : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவுவதாகக் கருதப்படும் தூம்பற்ற முளையடிச் கரப்பியான கபச்சுரப்பி போதிய அளவில் இல்லாமல் இருத்தல். இதனால் பெண்களுக்குக் கருப்பை மெலிவும் மாதவிடாய் தோன்றாமையும், பாலுணர்ச்சி உந்துதல் இன்மையும் உண்டாகும். குழந்தைகள் குள்ளமாக இருப்பார்கள்.

hypoplasia : திசு வளர்ச்சிக் கோளாறு; குறை வளர்ச்சி : திசுவில் ஏற்படும் குறைபாடான வளர்ச்சி.