பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypoproteinaemia

558

hypothermia


hypoproteinaemia : புரதக் குறைபாடு; புரதக்குறைவு; தாழ்புரதக் குருதி : இரத்த ஊனீரில் புரதம் குறைவாக இருத்தல்.

hypopyon : கண்ணறைச்சீழ்; சீழ் முன்னறை : கண்ணின் முன்பக்க அறையில் சீழ் சேர்ந்திருத்தல்.

hyposecretion : சுரப்புக் குறைபாடு; தாழ்சுரப்பி.

hyposensitivity : உணர்வுக் குறைபாடு : ஒரு தூண்டுதலுக்கு உணர்வு ஏற்படாதிருத்தல்.

hyposmia : மோப்ப நுகர்வுணர்வுக் குறைபாடு தாழ்மோப்பம் : இயல்பான நுகர்வுத்திறன் குறைந்திருத்தல்.

hypospadias : சிறுநீர்க் குழாய்; உருத்திரிபு; அடிநீர்த்துளை; வழிக் கீழ் துளை : ஆணின் முத்திர ஒழுக்குக் குழாய் பிறவியிலேயே உருத்திரிபுடன் இருத்தல்.

hypostasis : குருதி வண்டல்; அடித்தேக்கம் : குருதி ஒட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற தேக்கம்

hypotension : தாழ் குருதியழுத்தம்; தாழழுத்தம்; குறை அழுத்தம் : தாழ்ந்த குருதியழுத்த நிலை. நெஞ்சுப்பைச் சுருக்கம் (10 எம்எம் எச்.ஜி (mm Hg) அளவுக்குக் குறைவாகவும் நெஞ்சைப்பை விரிவியக்கம் 70 எம்எம் எச்.ஜி அளவுக்குக் குறைவாகவும் இருத்தல்,

hypothalamaus : கீழ்த்தளம் : உடலின் செயற்பாடுகளைக் கட்டுபடுத்தும் முன் மூளைப் பகுதி. இஃது உணர்ச்சிகளுக்கும் இயற்கைக் கடன் உந்துதல் களுக்கும் பிறப்பிடமாகும்.

hypothenar eminence : அடிமுழு எலும்பு மேடு; அங்கையடி மேடு : உள்ளங்கையில் சுண்டு விரலின் கீழுள்ள அடிமுடி எலும்புப் பகுதி மேடாக இருத்தல்.

hypothermia : வெப்பக் குறைபாடு; குறைவெப்பம்; தாழ் வெப்ப நிலை :உடலின் வெப்பநிலை இயல்பு அளவுக்குத் குறைவாக இருத்தல். இது மிக இளம் வயதினருக்கும் மிகவும் முதியவர்களுக்கும் ஏற்படுகிறது. தலைக் காயங்களைக் குணப்படுத்துவதற்கும், நெஞ்சுப்பை அறுவைச் சிகிச்சையின் போதும் செயற்கையான வெப்பக் குறைபாடு (30°C அல்லது 86°F) ஏற்படுத்தப்படுகிறது.