பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acies

55

acne vulgaris


acies : விளிம்பு.

acinar : ஊநீர் சுரப்பிழை : ஊநீர் சுரப்பு இழைகள் தொடர்புடைய.

acinetobacter : ஆசின்டோபாக்டர் : மண்ணிலும் தண்ணிரிலும் காணப்படுகின்ற காக்கோ பாசில்லஸ் பிரிவைச் சார்ந்த நுண்ணுயிரி. இது மனிதனின் தோலின் மீதும் தொண்டையிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படும்.

acini : ஊனீர் சுரப்பு இழைகள் : சிறு பையுறை போன்ற ஊனிர் சுரக்கும் உயிரணுக்கள் கொண்ட உடற்பகுதி. பல ஊனிர் சுரப்பு இழைகள் சேர்ந்து ஒரு சிறு இதழாக அமைகின்றன.

acinitis : ஊநீர்ச் சுரப்பிழை அழற்சி : ஊநீர்ச் சுரப்பிழைகளில் அழற்சி உண்டாதல்.

acinous : கொத்துக் கொத்தாக : திராட்சைக் கொத்தையொத்த சுரப்பிகள். acinus : ஊநீர்ச் சுரப்பிழை; மூச்சு நுண்ணறை; சுரப்பணுக்குலை : ஒரு (1) சுரப்பியின் மிகச்சிறிய பகுதி. (2) நுரையீரலில் வாயு பரிமாற்றம் நடக்கின்ற அடிப்படை சுவாசப்பகுதி. இங்குதான் கரியமில வாயு வெளி யேற்றம் மற்றும் உயிர்வளி உள்வாங்கல் ஆகிய இருவகை விந்தைச் செயல்கள் நிகழ்கின்றன. ஒரு மனிதனின் நுரையீரல்களில் 800 கோடி மூச்சு நுண்ணுறைகள் உள்ளன.

acme : நோய் உச்சநிலை; நோயின் நெருக்கடி : ஒரு நோய் மிக முற்றிய உச்சநிலை.

aclasia : நோய் தொடரும் பகுதி.

acmesthesia : கூர் தொடு உணர்வு.

acne : முகப்பரு.

acnemia : கெண்டைக் கால் தசை செயலிழத்தல்.

acne vulgaris : முகப்பருக் கட்டிகள் :ஆண்பால் இயக்கு நீர்மங்களின் (ஆண்ட்ரோஜன்) கற்றோட்டத்தினால் மயிர்ப்பை நெய்மச் சுரப்பிகள் அளவுக்கு மேல் தூண்டப்படுவதாலும் மயிர், கொம்பு, நகம் போன்றவை உருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள் (கெராட் டின்) அடைபட்டு, மயிர்ப்பை நெய்மம் (செபம்) அளவுக்கு அதிகமாகச் சேர்வதாலும் உண்டாகும் நிலை. பின்னர், தோல் பாக்டீரியாக்கள் அடை பட்ட மயிர்பை நெய்மத்தை அரிப்பு உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களாக மாற்றுகிறது. இந்த அமிலங்களே வீக்கத்திற்கும், கொப்புளம் உண்டாவதற் கும் காரணமாகிறது. இதைக் குணப்படுத்த 'மானோசைக்ளின்' மருந்தைப் பயன்படுத்தலாம்.