பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hypothesis

559

hystereurysis


hypothesis : கருதுகோள் : 1. வாத ஆதாரமாகத் தற்காலிகமாகக் கொள்ளப்படும் கருத்து. 2. மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.

hypothymism : கேடயச் சுரப்பி இயக்குநீர்; ஒருங்கிணைப்புக் குறைபாடு : கேடயச்சுரப்பி இயக்குநீர்கள் போதிய அளவு ஒருங்கினையாமல், வெளியேறுதால்.

hypothyroidism : கேடயச் சுரப்பு நீர் குறைபாடு; குறைக்கேடய நிலை : கேடயச் சுரப்பி நீர் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலை. இது இரகசியமாக உருவாகுகிறது. இதனால், சோர்வு, உறக்கம், உடல் எடை அதிகரிப்பு, தோல் உலர்தல், மந்திப்புக் கோளாறு, மிகை மாதவிடாய்ப் போக்கு, மலச்சிக்கல், தசை நாண் இயல் நரம்பியக்கம் தாமதமாக ஏற்படுதல் மனச்சோர்வு, பைத்தியம் போன்ற அறிகுறிகள் தோன்றும்

hypotonia : அரிதுயில் நிலை : 1. உடல்நலம் அல்லது விசை யுணர்வு குறைவாக இருக்கும் நிலை 2.தமனிகள் தளர்ச்சியடைந் திருத்தல். 3. தசைவிறைப்புக் குறைவாக இருத்தல்.

hypotropia : பார்வை அச்சு ஒரு புறச்சாய்வு : ஒரு கண்ணின் பார்வை அச்சு, கீழ்நோக்கிச் சாய்ந்திருத்தல்.

Hypovase : ஹைப்போவாஸ் : பிராசோசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

hypoventilation : உயிர்ப்புக் குறைபாடு.

hypovitaminaemia : வைட்டமின் குறைபாடு : குருதியில் வைட்ட மின்கள் குறைவாக இருத்தல்.

hypovitaminosis : வைட்டமின் குறைவு நோய்; தாழ் உயிர்ச் சத்துவம் : வைட்டமின்கள் குறைவாக இருப்பதால் ஏற்படும் நிலை.

hypovolaemia : மிகைக் குருதிக் குறைபாடு : சுற்றோட்டமாகச் செல்லும் குருதியின் அளவு மட்டுமீறிக் குறைவாக இருத்தல்.

hypoxaemia : ஆக்சிஜன் குறைபாடு : தமனி இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருத்தல்.

hypoxia : திசு ஆக்சிஜன் குறைபாடு; உயிர்வளிக் குறை : திசுக்களின் ஆக்சிஜன் அளவு குறைந்திருத்தல்.

hysterectomy : கருப்பை அறுவை மருத்துவம்; கருப்பை ஆக்கம்; கருவகம் எடுப்பு : கருப்பை சார்ந்த அடிவயிற்றுப் பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல்.

hysteresis : காந்தத் தூண்டல் குறைபாடு : காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும் நிலை.

hystereurysis : கருப்பை விரிவாக்கம் : கருப்பையின் கீழ்ப்