பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hysteria

560

hysterosalpingoo..


பகுதியும், கழுத்துக் குழாயும் விரிவடைவதல்.

hysteria : அச்சவெறி; வெறுப்பு நோய்; நரம்பிழுவை : நரம்புக் கோளாறினால் அநேகமாக பெண்கள் உளப்பண்பு உரம் பாதிப்பால் தன் வயம் இழக்கும் இசிப்பு. முடக்கு வாதம், உணர்விழப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

hysterics : வலிப்புத் துடிப்புகள் : பெண்டிர் தன்வயம் இழப்புக் கோளாறில் உறுப்புகளில் இழுப்பு வலிப்புகள்.

hysterogeny : இசிப்பு நோய்த் தூண்டல் : இசிப்பு நோய்க் கோளாறு உண்டு பண்ணுதல்.

hysterography : கருப்பை ஊடு கதிர்ப்படம் : கருப்பைக் குழவினுள் ஒர் ஒப்பீட்டு ஊடகத்தைச் செலுத்திய பிறகு கருப்பையின் ஊடுகதிர்ப்படம்.

hysterology : கருப்பையியல் : கருப்பை பற்றிய ஆய்வியல்.

hysterolysis : கருப்பைத் துண்டிப்பு : கருப்பைக்கும் சுற்றியுள்ள கட்டமைப்புக்கு மிடையிலான ஒட்டினைத் துண்டித்தல்.

hysteromyoma : கருப்பைக் கட்டி : கருப்பைத் தசைக் கட்டி அல்லது நரம்புக் கட்டி.

hysteromyotomy : கருப்பை கட்டி அறுவைச் சிகிச்சை : கருப்பை இழைநார்த் தசைக்கட்டியை அகற்றுவதற்காகக் கருப்பைத் தசைக்குள் கீறுதல்.

hysteropexy : கருப்பை நிலைப்பாடு : தவறான இடத்தில் அமைந்துள்ள அல்லது அளவுக்கு மீறி அசைகிற கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் நிலையாகப் பொருத்துதல்.

hystero salpingectomy : கருப்பைக் குழாய்த் துண்டிப்பு : கருப்பைக் குழாய் அறுவை மருத்துவம் கருப்பையினையும் கருப்பைக் குழாய்கள் இரண்டையும் துண்டித்து எடுத்தல்.

hysterosalpingogram : கருப்பை குழாய் ஊடுகதிர்ப் படம் : கருப்பை, கருவெளியேறும் குழாய்கள் ஆகியவற்றின் ஊடுகதிர்ப் படம். இதில் வாயு அல்லது கருப்பை வாய் வழியாகச் செலுத்தப்படும், ஊடுகதிர் ஊடுருவாத பொருள் பயன்படுத்தப் படுகிறது.

hyterosalpingography : கருப்பை ஊடுகதிர் ஆய்வு : கருப்பை கருவெளியேறும் குழாய்கள் ஆகியவற்றை ஊடுகதிர் மூலம் ஆய்வு செய்தல். இது மலட்டுத் தன்மையை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.

hysterosalpingoophorectomy : கரு அண்ட அறுவை மருத்துவம் : கரு அண்டங்கள், கரு வெளியேறும் குழாய்கள் ஆகிய இரண்டையும், அல்லது அவற்றில்