பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hysterosalpingostomy

561

hystorectomy


ஒன்றை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

hysterosalpingostomy : கருவக அண்டக் குழல் வாயமைப்பு : கருப்பைக்குள் கரு உட்புகும் குழாயில் உள்ள அடைப்புகளைக் களையும் அறுவை மருத்துவம். கருவண்டத்திலிருந்து கரு முட்டை அணுவை கருப்பைக்குள் கொண்டு சேர்க்கும் கருக்குழாயில் அடைப்பிருந்தால் அறுவை மருத்துவம் செய்து அடைப்பு அகற்றுதல்.

hysteroscope : கருப்பை ஆய்வுக் கருவி : கருப்பைவாய், கருப்பையின் உட்பகுதி ஆகியவற்றை ஆராய்வதற்கான பார்வைக் கருவி.

hysterotomy : கருவக அறுவை; கருப்பை துளைப்பு; கருவகத் திறப்பு : கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

hysterotrachelorraphy : கருப்பைக் கழுத்துச் சீராக்கம்; கருவகக் கண்டத் தைப்பு : சிராய்த்துக் காயப்பட்ட கருப்பைக் கழுத்துப் பகுதியைச் சீர்படுத்துதல்.

hystorectomy : கருப்பை நீக்கம்.