பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



I

IAP : ஐஏபி : இந்தியக் குழந்தை மருத்துவக் கழகம் (Indian Academy of Paediatrics)

iatrogenic : இரண்டாம் நிலை; மருத்துவத் திரிபியம் : ஒரு முதல் நிலையைக் குணப்படுத்துவதால் உண்டாகும் இரண்டாம் நிலை.

iatrogenesis : மருத்துவத் திரிபுநிலை : நோய்ச் சிகிச்சையினால் உண்டாகும் புதிய நிலைமை. |

I band : ஐ-பட்டை : வரிச்சவ்வுத் தசை இழைமத்தின் ஒரே குணமுள்ள பட்டை. இது வக்கரிப்பு ஒளியில் கருமையாகத் தோன்றும். மங்கிய ஒளியில் பிரகாசமாகத் தோன்றும்.

IBD : ஐபிடி : குடல் வீக்கம் நோயின் (Inflammatory Bowel Disease) சுருக்கம்.

IBS : ஐபிஎஸ் : வயிற்று எரிச்சல் நோயின் (Irritable Bowel Syndrome) சுருக்கம்.

ibuprofen : ஐபுப்ரோஃபென் : மயக்கமூட்டாத அழற்சியகற்றும் மருந்து.

IC : ஐசி : உட்சுவாசத்திறன் (Inspiratory capacity) என்பதன் சுருக்கம்.

Ice : பனிக்கட்டி : உறுப்புகளில் காயங்களும் வீக்கங்களும் ஏற் பட்டிருந்தால், அதில் பனிக்கட்டியை வைத்துக் குணப்படுத்தும் முறை.

Ice-cream headache : குளிருணவுத் தலைவலி : குளிர் பாலேடு (ice-Cream) போன்ற குளிர்ச்சியான உணவுகளை உண்பதால் உண்டாகும் தொண்டை எரிச்சல் காரணமாக ஏற்படும் ஒற்றைத் தலைவலி.

ICD : ஐ.சி.டி : பன்னாட்டு நோய் வகைப்பாடு (International Classification of Diseases) என்பதன் சுருக்கம்.

ICDS : ஐ.சி.டி.எஸ் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைத் திட்டம். பள்ளி செல்வதற்கு முன் குழந்தைகளின் உடல் நிலை, மனநிலை, சமூகநிலை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், தங்கள் குழந்தைகளின் ககாதாரத்தையும், ஊட்டச்சத்தையும் கவனிப்பதற்கு தாய் மார்களுக்குள்ள திறமையை அதிகரிப்பதற்கும் தாய் சேய் மரணத்தைத் தடுப்பதற்குமான இந்திய அரசின் திட்டம். இப்போது இந்தத் திட்டம்,