பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ideational apraxia

564

idioventricular


அறிவுத் திறன், நினைவுத் திறன் ஆகியன அடங்கும்.

ideational apraxia : அசைவு இயக்கக் குறைபாடு : ஒர் அசை வுகளின் வரிசையை ஒர் ஒழுங்கு முறையில் செயற்படுத்த இயலா திருத்தல்.

ide eruption : விரல் கொப்புளம் : விரல்கள், உள்ளங்கைப் பக்கங் களில் ஒவ்வாமைக் கொப்புள எதிர்விளைவு. இதிலிருந்து பூஞ்சணத்தைத் தனிமைப்படுத்த முடியாது.

identical twins : முழுதொத்த இரட்டையர் : சினைப்பட்ட ஒரே கருமுளையிலிருந்து வளர்ச்சியடைந்த இரட்டைக்குழவிகள்.

identification : அடையாளம்; இனமறிதல்; இனம் காண்டல் : உளவியலில், தேர்ந்தெடுத்த ஒரு வரை முன்மாதிரியாகக் கொண்டு நமது ஆளுமையை உருவாக்கிக் கொள்ளுதல்.

identity : அடையாளம்; கறி குறி.

ideogram : குறை நிரப்பு வரைபடம் : ஒர் உயிரணுவின் இனக்கீற்றுக் குறை நிரப்பின் வரை பட உருவாக்கம்.

ideoglossia : பேச்சுத் திறனின்மை : தெளிவாகப் பேசுவதற்கு இயலாமை.

ideokinetic apraxia : இயக்கத் தொடர்பின்மை : ஒரு எண்ணத்தின் மற்றும் இயக்கச் செயலின் தொடர்பின்மை.

ideomotor : உளவியல் கிளர்ச்சி : தசைகளின் தானியக்கத்தை உண்டுபண்ணும் கருத்துகளின் வடிவில் எழும் உளவியல் உந்து ஆற்றல். எடுத்துக்காட்டாக, உறுப்புகளின் கிளர்ச்சி இயக்கத்தை உண்டாக்கும் மனக்கிளர்ச்சி.

ideocy : மூடம்.

idiopathic : ஆதாரமில்லா முதல் நிலை நோய்; மூலமில்லா : வேறொரு நோயின் நிலையாய் அமையாமல் முதல் நிலையாக குறிப்பிட்ட காரணமின்றித் தோன்றும் நோய்.

idiosyncrasy : தனிமனப் போக்கு; இயல்புக்கு மாறாக செயல்; தனித் துவம் : தனிச்சிறப்புக்குரிய பண்பு தனிமனிதருக்குச் சிறப்பியல்பான உடலமைப்பு.

idiot : மூடன் : மொத்தமாக மனக்கோளாறுடைய ஒர் ஆள்.

idioventricular : இதயக் கீழறைத் தொடர்பறு நிலை : இதயக் கீழ றைத்துளை தொடர்புடைய நிலை. இதய வாயிலிருந்து தொடர்பற்று இருக்கும்போது உண்டாகும் நிலை.