பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

idoxuridine

565

ileum


idoxuridine : ஐடோக்சுடின் : விழிவெண்படலப் படர்தேமல் சீழ்ப்புண்ணுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.

ig : ஐ.ஜி : தடைக்காப்புப் புரதம்.

ileitis : சிறுகுடல் வீக்கம்; கடைச் சிறுகுடல் அழற்சி : சிறுகுடலின் பின்பகுதியில் ஏற்படும் வீக்கம் (அழற்சி).

ileo : அடிச் சிறுகுடல் : சிறு குடலை பெருங்குடலுடன் இணைக்கும் சிறுகுடலின் அடிப்பகுதி.

ileocolostomy : செயற்கைப் புண் புரை: சிறுகுடல் பெருங்குடல் இடைத்துளைப்பு : சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடலுகுமிடையில் அறுவை மருத்துவம் மூலம் ஏற்படுத்தப்படும் செயற்கைப் புண்புரை. பெருங்குடல் முற்பகுதியில் அல்லது ஏறுமுகப் பெருங்குடலில் ஏற்படும் தடையை அல்லது வீக்கத்தை அகற்ற இது செய்யப்படுகிறது.

ileocystoplasty : சிறுநீர்ப்பை விரிவாக்க மருத்துவம் : சிறுநீர்ப் பையின் வடிவளவை அதிகரிப் பதற்குச் செய்யப்படும் அறுவை மருத்துவம்.

ileoileostomy : சிறுகுடல் வாயில் அறுவை மருத்துவம் : சிறுகுடலின் இரு பகுதிகளுக்கு மிடையில் அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு வாயில் உருவாக்குதல்.

ileorectal : சிறுகுடல்-மலக்குடல் சார்ந்த : சிறுகுடல், மலக்குடல் தொடர்புடைய.

ileostomy : சிறுகுடல் அறுவை மருத்துவம் : அடிவயிற்றுச் சுவற்றில் ஒரு கீறல் செய்து அதன் வழியாக சிறுகுடலைக் கொண்டு வருவதற்கான ஒர் அறுவை சிகிச்சை தோலுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு பையினுள் மலம் விழுவதற்கு அனுமதிக்கும் ஒரு செயற்கை வாயில் இது.

ileum : சிறுகுடற்பின்பகுதி; கடை சிறுகுடல்; ஈர்ப்பகம்; குடலீறு :