பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ileus

566

IM


சிறுகுடலின் கீழ்ப்பகுதியிலுள்ள ஐந்தில் மூன்று பகுதி.

ileus : குடல் அடைப்பு; குடல் அசைவிழத்தல்; குடல் தொய்வு : பக்கவாதத்தின்போது ஏற்படும் குடல் அடைப்பு. இதனால் வாந்தி உண்டாகும்.

ileus, paralytic : குடல் வாதம்.

ileoproctostomy : தசைநாளப் பிணைப்பு; சிறுகுடல் மலக்குடல் இணைப்பு : சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடல் அடிக்கூறுக்கும் (குதவாய்) இடையில் தசை நாளங்களில் அறுவை மருத்துவம்.

ilium : இடுப்பெலும்பு.

ill : நோயுற்ற; நலமிலா; நோய் நிலை : பிணியுற்ற கோளாறுற்ற: ஆரோக்கியமற்ற.

iliacartery : இடுப்புக்குருதி நாளம் : இடுப்புத் தமனி.

illac passion : குடலடைப்புவலி : அடிக்குடலில் அடைப்பு ஏற்ப டுவதால் உண்டாகும் நோவு.

illegitemacy : முறைக்கேடு.

illness : நோய்மை : உடல் நலமற்ற நிலை; சீக்கு.

illium : இடுப்பெலும்பு : வயது வந்தவரிடையே மூன்று எலும்பு இடுப்பெலும்புகளின் இணைவாகவுள்ள இடுப்பெலும்பின் மேற்பகுதி.

iIIumination : ஒளிரூட்டுதல்; ஒளிர்மை; ஒளிமை : நுண் ணோக்காடியில் ஒர் உறுப்பினை அல்லது பொருளை ஆய்வு செய்வதற்காக ஒளிருட்டுதல்.

illusion : விழிமாறாட்டத் தோற்றம்; திரிபுக் காட்சி; தோற்ற மயக்கம்; மருட்கை : திருவுரு பொய்த் தோற்றம், மாயத்தோற்றம். எடுத்துக் காட்டாக, ஒரு வெள்ளைத் துணியை பேய் என்று தவறாக எண்ணுதல்.

illotycin : ஐலோட்டிசின் : எரித்ரோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

IM : ஐ.எம் : உள்தசை(Intramuscular) சார்ந்த என்பதன்சுருக்கம்.