பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

immunologist

570

immunotherapy


மூலங்களுடன் இணைந்து நோய்த் தடைக்காப்பினை உண்டாக்ககிறது.

immunologist : ஏமாக்காப்பியலறிஞர் : ஏமக்காப்பில் துறை போகிய வல்லுநர்.

immunology : நோய்த்தடைக் காப்பியல்; நோய்த் திசுப்பாற்றியல்; ஏமவியல் : உடம்பிலுள்ள நோய்த் தடைக்காப்பு தூண்டு திறன் பற்றிய ஆய்வியல்.

immuno modulation : ஏமக்காப்பு மாற்றமைப்பு : குறிப்பிட்ட உயிரியல் திரிபாக்கிகள் அல்லாத திரிபாக்கிகள் மூலம் ஏமக்காப்பு முறையை மாற்றி யமைத்தல், நிணநீர்ப் பொருள்கள், அல்லது நோயாளியின் தன் உயிரணுக்களுக்கு எதிராக உற்பத்தியாகும் குறிப்பிட்ட மூலக் கூறுகளை இதற்கு உதவுகின்றன.

immunopathology : தடுப்பாற்று நோயியல்; திசுக்காய ஆய்வியல் : நோய்த் தடைக்காப்பு அமைப்புத் தொடர்பான திசுக் காயம் குறித்து ஆராய்தல்.

immunophenotyping : ஏமக்காப்பு வடிவமைப்பு : ஒற்றைப் பால்படு நோய் எதிர்ப் பொருள்கள் போன்ற ஏமக்காப்புக் குறியீடுகளுடன் உயிரணுக்களை வடிவமைத்தல்.

immunoprecipitation : ஏமக்காப்பு வீழ்படிவு : காப்பு மூலம் தற்காப்பு மூலம் வினையின் விளைவாக ஏற்படும் வீழ்படிவு.

immuno proliferative small intestinal disease (IPSTD) : ஏமக்காப்பு பரவல் சிறுகுடல் நோய் (IPSTD) : சிறுகுடலில் நோய் பரவல். இது குறிப்பாக நிணநீர் ஊடுருவல் காரணமாக உண்டாகிறது. இதனால், ஈர்ப்புச் சக்தி குறைபாடு, பசியின்மை, இளவயதினரிடம் காய்ச்சல் உண்டாகிறது. இதனை ஆல்ஃபா கனச்சங்கிலி நோய் என்றும் அழைப்பர்.

immunosorbent : ஏமக்காப்பு ஈர்ப்புப் பொருள் : ஒரு கலவையிலிருந்து ஒத்திசைவான தற்காப்பு முலத்தை ஈர்த்துக் கொள்ளும் தற்காப்பு மூலம்.

immunos uppressant : ஏமக்காப்புக் குறைப்புப் பொருள் : ஏமக்காப்புத் துலங்கலைக் குறைக்கிற ஒரு பொருள்.

immunosuppression : நோய்த் தடைக்காப்புக் குறைப்பு மருத்துவம்; தடுப்பாற்றலடக்கு : நோய்த் தடைக் காப்புத் தூண்டு திறனை மட்டுப்படுத்துவதற்கான மருத்துவம்.

immunotherapy : தடுப்பியம்; ஏமக்காப்பு மருத்துவம்; ஏமப் பண்டுவம்; தடுப்பு மருத்துவம் : ஒருவரிடம் நோய்த் தடைக் காப்பினை உருவாக்குவதற்கு