பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/572

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

imodium

571

implant


முன் உருவாக்கிய தற்காப்பு மூலங்கள் மூலம் நடைபெறும் தானியக்க ஏமக்காப்பு உருவாக்கம்.

imodium : இம்மோடியம் : ஐயோபெராமிட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

impacted tooth : தெற்றுப்பல் : மற்றொரு பல்லுக்கு அடியில் வளரும் பல். இது மேல் நோக்கி வளர முடிவதில்லை.

impaction : நெரிப்பு.

impairment : இயல்பு திரிபு : ஒரு கட்டமைப்பின் அல்லது செயற்பாட்டின் இழப்பு அல்லது இயல்பு திரிபு.

impalpable : தொட்டுணர முடியாத : தொட்டுணர முடியாத அளவுக்கு மிக மெல்லியதான மிக நுண்ணியதான.

impaludism : மண்ணீரல் அழற்சி காய்ச்சல் : சதுப்பு நிலத்தில் வாழ்வோரிடையே காணப்படும் இடையிடையிட்ட மண்ணீரல் அழற்சியும் காய்ச்சலும் வாய்ந்த நோய்.

impassable : செல்லமுடியா.

impediment in speech : தெற்றுவாய் : திக்கித் திக்கிப் பேசுதல்.

inperforate : துளையில்லா; மாத விடாய் வழியடைப்பு; இயல்பு மாறிய அடைப்பு : பெண்ணின் கருப்பை வாய்க்குழியில் (யோனிக்குழாய்) மாதவிடாய் திரவம் வெளியேறுவதற்கு இயற்கையான திறப்பு வழி இல்லாதிருத்தல். இது பிறவிலேயே ஏற்படுகிறது.

impervious : புகா.

impetiginization : கொப்புளத் தொற்று : வேறொரு தோல் நோயின் இருப்பிடத்தில் கொப்புளங்கள் தோன்றுதல்.

impetigo : கொப்புளத் தொற்று நோய்; செஞ்சொறி; தொற்றுச் சிரங்கு :கொப்புளத்தில் உண்டாகும் ஒருவகைத் தோல் வீக்க நோய். இது கடுமையாகத் தொற்றக் கூடியது.

implant : செயற்கைப் பொருள் செலுத்தம்; இழுவை : உடலினுள் அறுவைச் சிகிச்சை மூலம் ஒர் இயற்கையான அல்லது செயற்கையான பொருளைப் பொருத்துதல் அல்லது செருகுதல்.