பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

implantation

572

inanition


implantation : உயிரணு பொருத்துதல்; உயிரணுப் பதியம்; உள் வைத்தல் இடுகை : திசுக்களில் உயிருள்ள உயிரணுக்களை அல்லது திடப்பொருள்களை உள்ளே புகுத்தல். எடுத்துக்காட்ட ரேடியம் அல்லது திட மருந்துகளை உட்புகுத்தல். கருப்பையின் உள்வரிச் சவ்வில் கருவுற்ற சினையைப் புகுத்துதல் வேறு திசுவை ஒட்டுதல்.

implants : செலுத்துத் திசுக்கள்; உள்வைப்பு : திசுக்களில் அறுவை மருத்துவம் மூலம் புகுத்தப்படும் ஒட்டுத் திசுக்கள்.

impotence : ஆண்மைக்குறை; ஆண்மையின்மை : ஆணிடம் பாலுறவுக்கான ஆண்மைத் தன்மை இல்லாதிருத்தல்.

impregnate : சினைப்படுத்துதல்; கருவுறச் செய்தல்.

impregnation : சினையூட்டம்; சூலமை : ஒரு சினை முட்டையைக் கருவுறச் செய்தல்.

impression : பதிவாதல்; சுவடு; பதிவு; சுவடு, படுதல் : 1. ஒரு மேற்பரப்பில் ஏற்படும் பதிவு. 2. மனதில் ஏற்படும் ஒர் எண்ணப் பதிவு. 3. உரிய பற்பொருள்களைப் பயன்படுத்தி பல்வளைவு அல்லது பற்கள் முழுவதன் அல்லது அதன் பகுதியின் பதிவுருவை எடுத்தல்,

imprint : முத்திரை; படிவுறுதல் : அழுத்த மூலம் ஏற்படுத்தும் ஒரு குறியீடு; ஒரு மேற்பரப்பில் உண்டாகும் பதிவுரு.

impulse : திடீர் உணர்ச்சி; உளத் தூண்டல்; உணர்ச்சி வயப்படுதல்; துடிதுடிப்பு; உட்தூண்டு : நாடி நரம்புகளில் திடீரென அலையெழுப்பும் புறத் துண்டுதல்.

impulse, cardiac : இதயத்துடிப்பு.

impulse, merve : நரம்புத் துடிப்பு : நரம்பு அலை.

impure : மாசுற்ற தூய்மையற்ற.

impurity : மாசு.

inaction : செயலின்மை : தூண்டுதல் செய்வதற்குத் துலங்கல் ஏற்படாமல் போதல்.

imuran : இமுரான் : அசாத்தி யோப்பிரின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

inaccessibility : அணுக முடியாமை; எட்டாமை : உளவியல் மருத்துவத்தில் நோயாளியிடம் எவ்விதப் பதில் செயலும் எழாதிருத்தல்.

inactivation : செயலிழக்கை.

inactive : செயலிழப்பு.

inanimate : சடப் பொருள்.

inanition : உடல் எடைகுறைதல்; ஊட்டக் குறை : உடல் எடை