பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

indication

577

indication


indication : குறியீடு; அறிகுறி; தேவை நிலை : ஒரு நோய்க்கு முறையாகச் சிகிச்சையளிக்கப் படுகிறது என்பதைக் காட்டும் ஒரு குறியீடு அல்லது நிலை.

indicator : காட்டி.

indifferent : அசட்டை நிலை; மெத்தனமான : 1. இயல்பான தூண்டுதலுக்கு செயற்படாத நிலை, 2. வேறுபடுத்திக் காட்டியபடாத உயிரணுக்கள்.

indigenous : வட்டார நோய்கள்; உள்ளுர் நோய் : ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் அல்லது நாட்டில் பரவும் நோய்.

indigested : சீரணிக் காத; செரிமானமில்லாத.

indigestible : செரிமானமின்மை/வயிற்றுமந்தம்; செறியாநிலை : உணவு செரியாத நிலை; எளிதில் உணவு சீரணமாகாத நிலை.

indigestion : செரிமானமின்மை; செரியாநிலை; வயிற்று மந்த நோய் : வயிற்றில் உணவு சீரணிக்காமலிருத்தல், வயிற்று மந்தம்.

indigocarmine : நீலச் சாய கரைசல் : சிறுநீரகம் செயற்படுவதைப் பரிசோதிக்க உதவும் 04% கரைசல், சிறுநீர் நீலநிறமாக இருந்தால் சிறுநீரகம் இயல்பாகச் செயற்படுகிறது என்று பொருள்.

indirect : மறைமுக.

indirect laryngoscopy : மறைமுகக் குரல்வளை ஆய்வு : குரல் வளையை ஒரு கண்ணாடி மூலமாக ஆய்வு செய்யும் முறை.

indispensable : இன்றியமையாத.

indistinct : தெளிவிலா.

indisposed : நலிந்த.

indisposition : உடல் நலமிலா.

individual : தனியாள்; தனிய.

indocid : இண்டோசிட் : இண்டோமெத்தாசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

indole : இண்டோல் : குடல்களிலுள்ள டிரிப்டோஃபான் சிதை வுறுவதால் உண்டாகும் பொருள். இது நுரையீரலில் இண்டாசிலாக ஆக்சிகரணமாகி, சிறுநீரில் இண்டிக்கானாக வெளியேறுகிறது.

indolencea : நோவற்ற புண்; வலியற்ற புண் : வேதனை உண்டு பண்ணாத, ஆனால் மெதுவாக ஆறக்கூடிய புண்.

indoleacetic : இண்டோலிய சிட்டிக் அமிலம் : குடல்களிலுள்ள டிரிஃடோபான் வளர்சிதை வினை மாற்றப் பொருள் சிதைவுறுவதால் உண்டாகும் முக்கிய அமிலப் பொருள்.