பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

indolerit

578

infant


indolent : சோம்பல்; மெள்ளப் பரவும்; வலிமையிலா : வேலை செய்ய மனமில்லாதிருத்தல்; நோவுதராத வேதனை உண்டு பண்ணாத.

indomethacin : இண்டோமீத்தாசின் : வீக்கத்தைக் குறைக்கக் கூடிய மருந்து வாதக் கோளாறுகளுக்குப் பயன்படக் கூடியது. குமட்டலைத் தடுக்க வாய் வழி உட்கொள்ளலாம்.

indoramin : இண்டோராமின் : தாழ்ந்த குருதியழுத்தத்தைக் குறைக்கக் கூடிய மருந்து.

induced abortion : தூண்டிய கருச்சிதைவு; கருச்சிதைவு தூண்டல்; தூண்டல் சிதைவு : மருத்துவ முறை மூலம் கருச்சிதைவினைத் தூண்டிவிடுதல்.

induction : இடுப்புவலி வருவித்தல்; தூண்டல்; ஊக்குதல் : மயக்கம் இடுப்பு வலி, (மகப்பேற்று வலி) போன்றவற்றைத் தூண்டி வருவித்தல்.

induction of labour : பேற்றுத்தூண்டுகை.

induration : உணர்விழப்பு; கடின மாதல் : திசுக்களைக் கடினமாக்கி உணர்ச்சியிழக்கச் செய்தல்.

industrial : தொழில் சார்ந்த.

industrial disease : தொழிலியல் நோய்கள்; தொழில்சார் நோய்கள் : ஒரு தொழிலில் ஈடுபடும் போது தூசு, புகை, வேதியியல் போன்ற பொருள்களால் உருவாகும் நோய்.

industrial therapy : தொழிலியல் மருத்துவம் : உளவியல் மருத்துவ மனையில், தொழிலான நோயாளிகளுக்கு உளவியல் சிகிச்சையளித்து, அவர்களை மீண்டும் தொழிலாளர் சமுதாயத்தில் சேர்ப்பதற்கு ஆயுத்தம் செய்யும் பகுதி.

indwelling : உள்ளுறைதல் : உடலுக்குள் இருக்கும் செருகு குழல், வெளியேற்றுக் குழாய், அல்லது பிற சாதனங்கள் போன்றவை.

inebriation : குடிவெறி; மது மயக்கம்; போதை : குடிபோதையில் உள்ள நிலை, மதுமயக்கத்தில் இருத்தல்.

inertia : செயலின்மை; இயக் கொழிவு; மெதுநிலை : கருப்பை சுருங்கி விரியாமல் செயலற்றதாக இருத்தல்.

inertia, uterine : கருப்பை மெதுநிலை.

inextremis : இறக்குந் தறுவாயில்.

infant : குழவி; பச்சிளங் குழந்தை; கைக்குழந்தை : ஒரு வயதுக்குக் குறைந்த பச்சிளங்குழந்தை.