பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

infrared

581

inhibition


அல்லது நோய் நடைமுறையையும் அதில் அடங்கியுள்ள அபாயங்களையும் நன்கு விளக்கிக்கூறிய பிறகு அந்த நடை முறைக்கு உள்ளாக இசைவு தெரிவித்தல்.

infrared : செவ்வகல்.

infrared rays : அகச் சிவப்புக்கதிர்கள் : நிறப்பட்டையில் சிவப்பு நிறத்துக்கு அப்பாற்பட்ட கட்புலப்படாக் கதிர்கள்.

infrascapular : தோள் பட்டை எலும்புக்குக் கீழே.

infrasternal : மார்பெலும்புக்கு அடியிலுள்ள.

infundibulum : பெய்குழல் வடிவு; கூப்புப் புழை : ஊற்றாங்குழல் போன்ற வடிவுடைய குழாய்.

infusion : சிரைவழி உட் சொரிதல்; உட் செலுத்துதல்; நீர்ம ஏற்றம்; நீர் ஏற்றல்; நீரேற்றம் : உடலினுள் திரவம் சொரிதல் அமினோ திர வங்களை உடலுக்குள் செலுத்துதல்; திரவ மேற்றுதல்.

ingestion : உணவுச் செலுத்தம்; உட்கோள் : உணவை அல்லது மருந்தை இரப்பைக்குள் கொண்டு செல்லுதல்.

ingram regime : யானைச்சொரி மருத்துவம் : யானைச்சொரி எனப்படும் நமட்டுச் சொறியை குணப்படுத்தும் முறை. இதற்கு டித்ரோனால் குழம்பு, புற ஊதா ஒளி பயன்படுகிறது.

ingravescent : நோய்நிலை சீர்கேடு : நோயுற்ற நிலையில் மேலும் சீர்கேடு அடைதல்.

ingredient : கலவைக் கூறு; உட்பொருள் : ஒரு கூட்டுப் பொருள் அல்லது கலவையின் ஒரு கூறு.

ingrown : உள்முக வளர்ச்சி : உள்நோக்கி வளர்தல், நகம் சதைக்குள் வளர்தல், இதனால் நோய்த் தொற்று தசைவீக்கம் உண்டாகும்.

inguinal : கவட்டு.

inhalant : உள்வாங்கு பொருள் : மூச்சோடு உள்ளிழுத்து நுரை யீரல்களுக்குள் பரவுமாறு உட்கொள்ளும் பொருள்.

inhalation : மூச்சுவழி உள் இழுத்தல்; மூச்சிழுத்தல்; ஆவி பிடித்தல் : காற்று அல்லது பிற ஆவி முதலியவற்றை உள் வாங்குதல் உள் இழுக்கப்படும் மருந்துப் பொருள்.

inhaler : முகர்குழல்.

inherent : உள்ளார்ந்த; உற்ற : இரண்டற நீங்காது உள்ளியல் பாக இருக்கிற.

inheritance : மரபுரிமை.

inhibition : தடையுணர்ச்சி; உட்தடுப்பு : நீடித்த பழக்கம்