பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/588

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intelligence quotient

587

intercurrent


அறிவாற்றல் : ஆறறிவுடைய உயிர்களுக்குள்ள கூர்மைத் திறன், விவேகம், இதை அறிவு அளவெண் மூலம் அளவிடலாம் அறிவாற்றல்.

intelligence quotient : அறிவுத்திற அளவெண்; அறிவுத் திறனளவு : அறிவுக்குக் குறி எண். மதி நுட்ப அளவு அலகு.

intensity : செறிவு.

intensive care unit (ICU) : தீவிரச் சிகிச்சைப் பிரிவு (ICU) : கடுமை யான நோய், காயம், அறுவைச் சிகிச்சைகாரணமாகத்தொடர்ச்சியான கண்காணிப்பு தேவைப்படும் நோயாளிகளுக்காக மருத்துவ மனையிலுள்ள ஒரு தனிப் பிரிவு. இதில் பணியாற்றுபவர்கள் இதற்கெனத் தனிப் பயிற்சி பெற்றவர்கள்.

intensive therapy unity (ITU) : தீவிர மருந்துவப் பிரிவு : மிக உயர்ந்த மருந்து உத்திகள் பயன் படுத்தப்படும் மருத்துவப் பிரிவு.

intensive inoculation : தீவிர மருந்தூசி போடுதல் : படிப்படியாகச் செறிவை மிகுதிப்படுத்தி மருந்துசி போடுதல்.

intention : மருத்துவத் திட்டம்; நோக்கம்; உட்சிமை : 1 நோயைக் குணப்படுத்தும் ஒர் இயற்கை முறை. 2. உட்கருத்து.

interaction : பின்னிய செயல் விளைவு; இடைவினை : ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவை ஒன்றின் மீது ஒன்று செயல் விளைவினைக் கொண்டிருத்தல்.

interarticular : மூட்டுகளிடையே; முடடிடை.

interatrial : இதயத் தமனிகளிடையே.

intercellular adhesion molecule-1 (ICAM-1) : உயிரணுக்களிடையே ஒட்டு மூலக்கூறு-1 (ICAM-1); அணுவிடை; உயிரணுக்களிடையே : வீக்கமடைந்த திசுவினுள் சென்று பலமுனைக் கரு வெள்ளணுக்களுக்குத் தேவைப்படும் காமா இடையீட்டுப் புரதத்தினால் தூண்டப்பட்ட ஒரு புரத அணு உற்பத்தி.

interception : குறுக்கீடு; கிடைமறிப்பு.

interchange : பரிமாற்றம்.

intercostal : விலாவிடை; இடுப்பெலும்புகளிடையே; விலா எலும்பு இடைவெளி.

Intercourse : பாலுறவு; கலவி; புணர்ச்சி.

intercourse, sexual : பாலினக்கலவி.

intercurrent : உடனிகர்வான : ஏற்கனவே ஒரு நோய் பீடீத்த ஒருவருக்கு இரண்டாவதொரு நோய் பீடித்தல்.