பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inter,digital

588

internship


inter, digital : விரவிடை.

interference : தலையீடு.

interferon : இடையீட்டுப்புரதம் : சில நோய்க்கிருமிகளுக்கு எதிரான ஒருவகைப் புரதம். ஒர் உயிரணுவை ஒரு கிருமி தாக்கும் போது இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யுமாறு உயிரணு தூண்டப்படுகிறது. அந்தப் புரதம் நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுகிறது.

interlobar : தொங்குதசைகளிடையே : பகுதி பிதுக்கங்களிடையே.

interleukins : ஏமக்காப்புப் புரதம் : ஏமக்காப்பு துலங்கல்களை ஒழுங்குபடுத்துகிற புரதப்பொருள். இவை பல்வேறு உயரணு வகைகளினால் துரிதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

interlocking : பின்னிக் கொளுவுதல் : யோனிக் குழாய் வழி இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் போது அரிதாக ஏற்படும் சிக்கல். இதில் இரட்டையின் முதல் குழந்தை பிட்டப்பிறப்பு நிலையில் வெளிவரும். அப் போது, அது இரண்டாவது இரட்டையின் தலைக்கு மேலே தனது தலையுடன் பின்னிக்கொளுவிக் கொண்டு இறங்கும்.

intermediary : இடையாளர்; இடைபொருள்.

intermediate : இடைநிலை.

intermediate-density lipoprotein (IDL) : நடுத்தர அடர்த்தி கொழுப்புப் புரதம் : குருதி நீர் கொழுப்புப் புரதம் இது கொழுப்புப் புரத லிப்போஸ் மூலம் வி எல் டி எல் நீரியல் பகுப்பு வாயிலாக அமைகிறது. இது குடலிலிருந்து ஈரலுக்கு கொலஸ்டிராலைக் கொண்டு செல்கிறது.

inter menstrual : மாதவிடாய்களிடையே.

intermittent : இடைமிதவல்; இடைவிட்ட : இடைவெளி விட்டு நடைபெறும் மிதவல் நடவடிக்கை.

internal : உள் உட்பகுதியில்; உட்காது : காதின் உள்ளுறுப்புகள் உள்ள பகுதி.

international : பன்னாட்டு; அனைத்து நாட்டு.

international unit IU : பன்னாட்டு அலகு IU : இயக்குநீர், செரி மானப் பொருள், வைட்டமின் போன்ற இயற்கைப் பொருள்களை அளவிடுவதற்குப் பன்னாட்டளவில் ஒப்பளிக்கப்பட்ட அலகு.

internship : உள்ளுறைப்பயிற்சி : ஒரு மருத்துவமனையில் அல்லது சுகாதார மையத்தில் உள்ளறைப் பயிற்சிக்காலம்.