பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acrochordon

58

acromelic


acrochordon : தொங்கு தோல் கட்டி.

acrocinesis : மிகைப்பு இயங்கல்.

acrocyanosis : கைகால் நீலம் பூத்தல் : ஆக்சிஜன் சரிவர ஊட்டப்பெறாத இரத்தம் சுழல்வதன் காரணமாகக் கை கால் பகுதிகள் நீலம்பூத்து இருக்கும் நோய் வகை.

acrodermatitis : கைகால் தோல் அழற்சி.

acrodermatosis : கைகால் தோல் நோய் : கை மற்றும் கால் தோலில் ஏற்படும் நோய் வகை.

acrodolichomelia : நீளக்கால், கை நோய் : நீண்ட கால்களும், கைகளும் காணப்படும் நோய் வகை.

acroedema : நிலைத்த கைகால் வீக்கம்.

acrodynia : முனைவலி.

acrodynia : கைகால் சிவப்பு : தோல் நரம்புக் கோளாறில் கை கால் பகுதிகளில் வேதனை தரும் அளவுக்குச் சிவப்பு நிறமாதல்.

acroesthesia : உறுப்புமுனைக் கூருணர்வு : கை கால்களிலும் வலி ஏற்படுதல் அல்லது இயல்பற்ற கூருணர்ச்சி தோன்றுதல்.

acrohyperhidrosis : கைகால் வியர்வை மிகைப்பு : உள்ளங்கை மற்றும் உள்ளம் கால்களில் அளவுக்கதிகமாக வியர்ப்பது.

acrohy pothermia : கைகால் வெப்பக் குறை.

acrohypothermy : கை கால் வெப்பக் குறைவு : உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் அதிகக் குளிர்ச்சி ஏற்படுதல்.

acrokeratosis : கைகால் மீள்உரு வளர்ச்சி : கை மற்றும் கால்களில் உள்ள தோலில் தடித்த வளர்ச்சி உருவாதல்.

acrokinesia : கைகால் இலக்க மிகைப்பு : கைகளிலும் கால்களிலும் காணப்படுகின்ற இயல்பற்ற அசைவுகள்.

acromastitis : கொங்கைக் காம்பு அழற்சி.

acromegaly : முனைப் பருமை; உறுப்பு அகற்சி; புறமுனைப் பருமன் கபச் சுரப்பி நோய் :குருதியில் கலந்து உறுப்புகள் செயற்படத் துண்டும் உட் சுரப்பு இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு மேல் சுரப்பதால், கைகள், பாதங்கள், முகம் ஆகியவை அளவுக்கு மீறி அகன்று விடுதல், குழந்தை களிடம் இது அரக்க உருத்தோற்றத்தை உண்டாக்குகிறது.

acromelic : கைகால் நுணி: கை கால் முனைப் பகுதிக்குத் தொடர்புள்ள.