பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

internuncial

589

intestine


internuncial : உயிரணுத் தொடர்பு மையம் : நரம்பு உயிரணுக்களி டையிலான தொடர்பு மையம்.

interosseous : எலும்புகளிடையே.

interphase : இடை நிலை : 1. உயிரணுப்பிளவின் ஒரு நிலை. இதில் டி.என்.ஏ மறுபடிவம் ஏற்படுகிறது. 2. ஒரு பொருளின் (வாயு அல்லது திரவம்) இரு நிலைகள் ஒன்றோடொன்ற தொடர்பு கொள்ளும் பகுதி அல்லது மண்டலம்.

interpolation : இடைச் செருகல் : 1. ஒர் ஊடுகதிர்ப்படத்தை ஆராய்ந்து, பகுப்பாய்வு செய்தல், மருத்துவப் படத்தின் முடிவுகளை ஒருங்கிணைத்தல். 2. நோயாளி கூறியவற்றை ஆழமாகப் பகுப்பாய்வு செய்தல்.

interposition operation : சிற்றெலும்பு மாற்று மருந்து : சிறு எலும்பு களின் தொகுதி முழுவதையும் அல்லது ஒரு பகுதியை அறுவை மருத் துவம் மூலம் மாற்றுதல்.

interpretation : உரை விளக்கம்.

interserosal : ஊனீர்ச் சவ்வுகளிடையே.

interupted
தடங்கல்.

intersection : ஊடுசந்தி.

interspinal : முதுகுத்தண்டு இணைப்பிடையே : முதுகுத்தண்டு இணைப்பு எலும்புகளுக்கிடையே உள்ள.

interval : இடைவெளி.

interval, lucid : தெளிவீடு.

intersex : இருபாலியல்பினர்; பால் திரிபு : இருபாலியல் பண்பு களும் வெவ்வேறு அளவுகளில் காணப்படும் ஒருவர்.

intersexuality : இருபால்தன்மை : ஆண்-பெண் இருபால் தன்மை களுமுடைய.

interstices : சிறுஇடைவெளிகள்: ஒடுங்கிய பிளவுகள் சந்து வெடிப்பு.

intestine : குடல் : உணவுக்குழாயின் கீழ்ப்பகுதி. இது பெருங்குடல், சிறுகுடல் என இரு பகுதிகளைக் கொண்டது.