பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intramedullary

591

intravasation


intramedullary : உள் சிறுமூளை சார்ந்த : 1. மூளையின் பின்பகுதி யிலுள்ள 2. தண்டுவடத்தினுள் உள்ள 3, எலும்பு மச்சை உட்குழிவு.

intramedullary : எலும்பு மச்சையினுள்.

intramural : சுவர்ப் படுகையுள்; சுவருள் : புழையுடைய குழாய் அல்லது உறுப்பின் சுவர்ப்படுகைப் பாளங்களுக்குள்.

intramuscular :தசையுள்; தசைக்குள்; தசையுள்.

intranasal : மூக்குள்; நாசியுள்.

intraocular : கண்கூட்டுள்; கண்ணுள்.

intraoperative : அறுவைச் சிகிச்சை சார்ந்த : அறுவைச் சிகிச்சையின்போது நிகழ்கிற.

intraora : வாய்வழியே; வாயுள் : வாய்வழியே செலுத்துதல்.

intraorbital : கண்குழியுள்.

intrapartal : மகப்பேறு காலம் : இடுப்புவலி தொடங்கி குழந்தை பிறக்கும் வரையுள்ள காலம்.

intrapartum : பிறப்பின்போது; பேற்றுள்.

intraperitoneal : வபையுள்; உதரப் பையுள் : அடிவயிற்று உட் பகுதியைச் சூழ்ந்துள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப் பையுள்.

intrapharyngeal : அடித்தொண்டையள்.

intraplacental : நச்சுக்கொடியுள்.

intrapleural : நுரையீரல் குழியுள்.

intrapulmonary : ஈரலுள்.

intrapunitive : தற்தண்டனைப்போக்கு; தன் நிந்தைய.

intraretinal : விழித்திரையுள் : கண் விழியின் பின்புறத் திறையுள்.

intraspinal : முதுகுத் தண்டுப் புழையுள்; முளைத் தண்டுள்.

intrasplenic : மண்ணீரலுள்.

intrasynovial : உயவு நீர்மத்தினுள்.

intrathoracic : மார்புக் கூட்டினுள்; மார்பகம்.

intratracheal : குரல்வளையுள்.

intrauterine : கருப்பையுள் : கருவுறுவதைத் தடுக்கக் கருப்பையுள் செருகப்படும் சாதனம்.

intravaginal : யோனிக் குழாயினுள்; அல்குலுள் : பெண்ணின் கருப்பைக் குழாயினுள்.

intraval : இண்ட்ராவல் : தியோப்பென்ட்டோன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

intravasation : இன்ட்ராவாசேசன் : புறஅதிர்ச்சி அல்லது நோய் நிலையில் குருதி நாளத்துக்குள் புறப்பொருள் நுழைதல்.