பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

intravascular

592

intuition


intravascular : குருதி நாளத்துள்; குழலுள்.

intravenous : சிரை வழி; நரம்பு வழி; சிரையுள் : நரம்பின் ஊடாக உட்செலுத்துதல்

intraventricular : இதயக் கீழறையினுள்.

intrinsic : உயிர்க்கூறான; அக நிலை : உள்ளார்ந்த உயிர்க்கூறான.

introitus : உள்வழி நுழைவாயில்; யோனி வாய்; யோனிப் புழை : உடலிலுள்ள ஒர் உள்வழி ஒரு குழிவினுள் உள்ள நுழைவு வாய், குறிப்பாக, கருப்பை வாய்க் குழாய்.

introjection : தூதான்மிய உணர்வு; உள்வீச்சு : புற உலகப் பொருள்களுடனும் ஒன்று பட்டு அவற்றின் நிலைகளையும் முடிவுகளையும் தமதாக உணரும் உணர்வு.

intromission : உறுப்புச் செருகல் : யோனிக் குழாயினுள் ஆண் குறியை நுழைத்தல் போன்று ஒர் உறுப்பினை இன்னொரு உறுப்பினுள் செருகுதல்.

intron : டிஎன்ஏ கூறு : படியெடுக்கப்பட்டுள்ள டிஎன்ஏ, ஆனால், இதில் ஒரு பாலிபெப்டைடுக்கான குறியீட்டுத்வல் அடங்கியிருக்காது.

introspection : உள்முக நோக்கு; தன் உள ஆய்வு : உற்புறக் காட்சி; தற்காட்சி, தன் உள்ளத்தைத் தானே நுணுகிக் காணும் செயல்.

introversion : அகமுகக் கோட்டம்; உட் திருப்பம்; உள்ளொடுக்கம் : அகம் புறமாகத் திருப்புதல் உள்முகச் சிந்தனை எண்ணங்களை உள் நோக்கித்திருப்புதல்

introvert : அகமுக நோக்காளர்; உள் நோக்குபவர்; அழுத்தமானவர் : சிந்தனை உள்முகமாகத் திருப்பும் இயல்புடையவர்; தன்னைப்பற்றியே எண்ணுபவர்.

intubatión : உட்செருகல்; குழல் பொருத்தம்; குழலுட் செலுத்தல் : குரல்வளை திறந்திருக்கும்படி அதனுள் குழாயைச் செருகுதல்.

intubation, endotrachal : மூச்சுக் குழலுள் செலுத்தல்.

intubator : செருகு குழாய்ச் சாதனம் : மூச்சுக் குழாயினுள் அல்லது குருதி நாளத்தினுள் உட்செருகு குழாயைசை செருகிக் கட்டுப்படுத்து வதற்கான ஒரு சாதனம்.

intuition : உள்ளுணர்வு : பகுத்தறிவு முறையில் சிந்திக்காமலேயே ஏதேனும் ஒன்றை நேரடியாக அறியும் அகத்திற உணர்வு.