பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iodism

595

iontophoresis


இயல்புடைய தனிமம். சிறு காயங்களுக்கு உடனடியாகப் பூசுவதற்கான 'டிங்சர்' தயாரிக்கப் பயன்படுகிறது.

iodism : அயோடின் நச்சு : அயோடின் அல்லது அயோ டைடுகளினால் நச்சூட்டம் ஏற்படுதல், தடுமன், வேனற்கட்டி ஆகியவை இதன் அறிகுறிகள்.

iodized oil : அயோடினேற்றிய எண்ணெய் : கரிம முறையில் இணைக்கப்பட்ட 40% அயோடின் அடங்கிய கசகசா விதை எண்ணெய். இது நிறமற்றதாகவோ அயோடின் வெண்மஞ்சள் நிறத்திலோ இருக்கும். இதன் கருநிறக் கரைசல்கள் ஊடுகதிர் (எக்ஸ்ரே) சோதனைகளில் பயன்படுகிறது.

iodofrom : அயோடின் நச்சுத் தடை மருந்து : நச்சுத்தடைக் காப்பாகப் பயன்படுத்தப்படும் அயோடின் சேர்மம்.

iodopsin : அயோடாப்சின் : வைட்டமின் Aஇல் உள்ள ஒரு புரதப்பொருள். கண்விழியின் பின்புறத் திரையிலுள்ள கழி வடிவக் கட்டமைப்பில் இருக்கும் கருஞ்சிவப்புப் பகுதியின் ஒரு கூறு.

iodoxyl : அயோடாக்சில் : 50% அயோடின் கலந்த ஒரு கலவை மருந்து, சிறுநீர்க்கோளாறு களுக்கு நரம்பு வழியாகக் சிறிது சிறிதாகச் செலுத்தப்படுகிறது.

ion : அயனி (மின்மயத் துகள்) : நீர்க்கரைசலிலும் சேண் வெளி யிலும் அணு அமைதிக் குறைவால் ஏற்படும் மின்செறிவூட்டப்பட்ட துகள்.

ienamin : அயோனாமின் : ஃபென்ட்டர்மின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ionizing radiation : அயனியாக்கக் கதிர்வீச்சு : உக்கிரக்கட்டிகளை அழிப்பதற்கான சிகிச்சை யிலும் ஊடுகதிர் உருக்காட்சியிலும் பயன்படுத்துப்படும் கதிர்வீச்சு. இது மரபணு அல்லது உயிரணுச் சேதத்தை உண்டாக்கும்.

ionization : அயனியாக்கம் : கரைசலிலுள்ள ஒரு பொருளைப் பிரித்தல்.

iontophoresis : அயனி இடப்பெயர்வு : 1. கரையும் உப்புகளின் அயனிகளை உப்புகளைத் திசுக்களினுள் மின்னோட்டம் மூலம் உட்செலுத்துதல், 2. ஒரு உப்புக் கரைசலின் வழியாக மின்னோட்டத்தைச் செலுத்தும் செய்முறை. இதனால், நேர் அயனி, எதிர்துருவத்தினுள்ளும்,