பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acrometagenesis

59

acroneurosis


acrometagenesis : கைகால் வளர்ச்சிமிகை : கைகளும் கால்களும் இயல்பற்ற வளர்ச்சி அடைதல், மிகை வளர்ச்சி பெறல்.

acromial : தோள் உச்சயில் ; தோள்பட்டையின் மேல்பகுதி : தோல் உச்சிக்கு அருகில்.

acromicria : உறுப்புக் குறுக்கம் : உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக உதவக்கூடிய தூம்பற்ற மூளையடிச் சுரப்பியிலிருந்து (கபச் சுரப்பி) சுரக்கும் இயக்குநீர் (ஹார்மோன்) குறைவாகச் சுரப்பதன் காரணமாக கைகள், கைகால் பாதங்கள் ஆகியவை சிறுத்து விடுதல் அல்லது குறுகி விடுதல்.

acromioclavicular : உச்சிக் காரை எலும்பின் : காரை எலும்பு மற்றும் தோள் உச்சியை இணைக்கின்ற.

acromion : தோள் உச்சி : தோள் எலும்பின் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டு இருக்கும் எலும்பு; இது காரை எலும்புடன் இணைந்து தோள் உச்சியை உண்டாக்குகிறது.

acromionectomy : தோள் உச்சி எலும்பு நீக்கல் : அறுவை மருத்துவம் மூலம் தோல் உச்சி எலும்பு அகற்றப்படுதல்.

acromion process : தோள் திருகு நோய் : தோள் பட்டை எலும்பின் ஒரு பகுதி சற்றே பின்புறமாகத் திருகி இருத்தல்.


தோள் திருகு நோய்


acromioplasty : தோள் உச்சி எலும்புச் சீரமைப்பு : தோள் உச்சி எலும்பை அறுவை மருத்துவம் மூலம் சீரமைத்தல்.

acromioscapular : தோள் உச்சித் தோள் எலும்பு : தோள் உச்சி எலும்புடனும் தோள் எலும்புடனும் தொடர்புடைய.

acromphalus : தொப்புள் வீக்கம் : (1) தொப்புளின் மையப் பகுதி. (2) தொப்புள் வீக்கம்.

acromyotonia : கைகால் தசை இசிவு : புறப்பகுதியில் உள்ள கை, கால் தசைகளில் சிதைவு ஏற்படுவதால் தசைகள் சுருங்கி விடுதல்.

acroneurosis : கைகால் நரம்பழற்சி நோய் :கை, கால்களில் ஏற். படும் ஒருவகை நரம்புக் கோளாறு.