பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

isfets of langerhans

599

isolevin


islets of langerhans : கணைய உயிரணுக்கள் : கணையம் முழு வதிலும் பரவலாக இருக்கும் தனிவகை உயிரணுக்களின் தொகுதி இவை கணைய நீரைச் (இன்சுலின்) சுரக்கின்றன. இந்நீர் இரத்த ஒட்டத்தில் நேரடியாக ஈர்த்துக் கொள்ளப்படுகிறது.

ismelin : ஐஸ்மெலின் : குவாணித் தைடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

isoagglutination : ஓரக ஒட்டுத்திரட்சி : ஒரே இனத்தைச் சேர்ந்த வேறொரு உறுப்பினரின் இரத்தத்திலிருந்து அணு ஒட்டுப்பொருள்களினாய் இரத்தச் சிவப்பணுக்கள் ஒட்டுத் திரட்சி அடைதல்.

isoagglutinin : நிகரிய ஒட்டுத் திரளி.

isocarboxazid : ஐசோகார்பாக்சாசிட் : சோர்வு நீக்கும் மருந்து.

isoetharine : ஐசோனத்தாரின் : மூச்சுக்குழாய் விரிவாக்க மருந் தாகப் பயன்படுத்தப்படும் பீட்டர்-2 என்னும் அண்ணிரகச் சுரப்பு நீர்.

isoenzyme : ஒரகச் செரிமானப் பொருள் : பல்வேறு திசுக்களில் காணப்படும் ஒரு புரத வினையூக்கி.

isoflurane : ஐசோஃபுளுரான் : விரைந்து ஆவியாகக்கூடிய திரவ மயக்கமருந்து. இது உப்பீனியோடு சேர்ந்த ஒருவகை ஈதர்.

isogel : ஐசோஜெல் : பேதி மருந்தாகப் பயன்படும் ஒருவகைக் குருணை மருந்தின் வாணிகப் பெயர்.

isolation : ஒதுக்கம்; தனிமைப் படுத்துதல்; ஒதுக்கிவைப்பு; தனியம் : பல்வேறு காரணங்களுக்காக ஒரு நோயாளியை மற்ற நோயாளிகளிடமிருந்து பிரித்து வைத்தல்.

isolation hospital : தனிமை மருத்துவமனை : தொற்று நோயாளர்களுக்காகத் தனிப்படுத்தப்பட்ட மருத்துவமனை.

isolation ward : தனிமைப் பிரிவு : தொற்று நோயாளர்களுக்காகத் தனிப்படுத்தப்பட்ட மருத்துவ மனைப் பிரிவு.

isoleucine : ஐசோலூசின் : இன்றியமையாத அமினோ அமிலங் களில் ஒன்று.

isolevin : ஐசோலெவின் : ஐசோப் பிரினாலின் சல்ஃபேட் என்ற மருந்தின் வணிகப் பெயர்.