பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

isomer

600

isotope


isomer : ஒரக அயனி : ஒரே மூலக்கூற்றுக் கட்டமைப்பையும், மாறுபட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் குணங்களையும் கொண்டுள்ள வேதியில் பொருள்கள். மூலக்கூற்றில் மாறுப்பட்ட அணுக்கள் அமைந் திருப்பதால் இவ்வாறு அமைகிறது.

isometric : சம மட்டுடைய; சம நீள்; இணை அளவு : ஒரே சீரான அளவுள்ள.

isometric exercise : ஒரு சீர்மைப்பயிற்சி : தடைக்கு எதிராக அழுத்தம் கொடுத்துத் தசையை வலுப்படுத்தும் தீவிரப் பயிற்சி.

isoniazid : ஐசோனியாசிட் : எலும்புருக்கி நோயில்(காச நோய்) பயன்படுத்தப்படும் மருந்து. இது ஐசோநிக்கோட்டினிக் அமிலத்திலிருந்து வழிப்பொருளாக எடுக்கப்படுகிறது.

isoprenaline sulphate : ஐசோப்பிரினாலின் சல்ஃபேட் : ஈளை நோய்க்குக் (ஆஸ்த்மா) கொடுக்கப்படும் மருந்து, இது குண்டிக்காய் இயக்குநீரிலிருந்து எடுக்கப்படும் பொருள்.

isoproterenol : ஐசோபுரோட்டீரனால் : மூச்சுக்குழாய் விரிவாக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் பீட்டா அண்ணீரகச் சுரப்பநீர்.

isoprenaline : ஐசோபிரினாலின் : ஆற்றல் வாய்ந்த, பீட்டா அண்ணீரகச் சுரப்பு நீர். இது ஆல்ஃபா அண்ணீரகச் சுரப்பு நீருடன் மிகக் குறைந்த அளவே தொடர்புடையது. குறை இதயத் துடிப்பு அல்லது இதய அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு இதயத் துடிப்பு வேகத்தைத் தூண்டு வதற்கு அவசர நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

isospora : ஐசோஸ்போரா : ஸ்போரோசோவான் ஒட்டுண்ணி. இது கடுமையான வயிற்றுப் போக்கை உண்டாக்கக்கூடியது.

isosthenuria : ஐசோதெனூரியா : திரவ உள் இழுப்பு குறைவாக இருந்தபோதிலும் குருதிநீர் போன்றே ஊடுகலப்புத் திறனுடன் சிறுநீர் சுரத்தல்.

isothermia : ஐசோதெர்மியா : ஒரு வெப்பநிலை உடைய.

isotonic : நிகரழுத்த : 1. ஒரே அளவு நெகிழ்வுத் திறனுடைய ஒரு கரைசல். 2. தசைச் சுருக்கத்தின் போது ஒரே அளவு எதிர்ப்புத் திறனைப் பேணுதல்.

isotope : ஓரகத்தனிமங்கள் : ஒரே எண்ணிக்கையிலான அணு எண்ணையும் உடைய ஒரு வேதியியல் தனிமம். இதில்