பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

isotopes

601

UGR


நியூட்ரான்களின் எண்ணிக்கையும், அணு எடையும் மாறுபட்டு இருக்கும்.

isotopes : ஓரகத் தனிமங்கள் (ஐசோடோப்புகள்) : ஒரே பொருண் மையுடன் எடை மட்டும் வேறுபாடுடைய தனிம வகை. கதிரியக்கத் தன்மையுடைய இத்தகைய தனிமங்கள் மருத்துவத்தில் நோய் மருத்துவத் துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

isopropanal : ஐசோபுரோப்பானால் : கைகளுக்குத் தொற்றுத் தடைகாப்பு மருந்தாகப் பயன்படும் வேதியியல் பொருள்.

isotone : ஓரெண் அணு :கருவுட் பகுதியில் நொதுமங்களை ஒரே எண்ணாக உடைய அணு.

isoxazole penicilline : ஐசோக்சாசோல் பெனிசிலின் : கொப்புளங்கள், அரச பிளவைகள் ஆகியவற்றைக் குணப்படுத்த வாய்வழி உட்கொள்ளப்படும் மருந்து.

isoxuprine : ஐசோக்சுப்ரின் : கருமுதிர்வுக்கு முன் ஏற்படும் வயிற்று வலிக்குக் கொடுக்கப்படும் மருந்து.

ispaghula : இஸ்பாகுலா : வயிற்று உப்புசத்திற்குப் பயன் படுத்தப்படும் இயற்கை இழைம உணவு.

issue : வெளிப்பாடு : 1. வழித் தோன்றல். 2. சீழ் அல்லது இரத்தம் வெளியேறுதல்.

isthmitis : தொண்டை வீக்கம் : தொண்டையிலும் வாயின் பின்பக்கப் புழையிலும் வீக்கம் உண்டாதல்.

isthmus : இணைப்புறுப்பு; உறுப்பு இடைஇணைப்பு; சந்தி : கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும்.

itch : சிரங்கு (நமைச்சல்); அரிப்பு; சொறி : தோலில் அரிப்புக் காணும் தொற்று நோய் வகை.

itch-mile : சிரங்குப்பூச்சி : தோலைத் துளைத்து, சிரங்குக்குக் காரண மாக இருக்கும் சிறுபூச்சி வகை.

ITP : ஐ.டி.பி. ITP : முதல்நிலைத் தட்டணுச் செம்புள்ளி நோய் (ldiopathic Thromnbocytopaemic purpura) என்பதன் சுருக்கம்.

ITU : தீவிரச் சிகிச்சைப் பிரிவு.

IUCD : உள்கருப்பைக் கருத்தடைச் சாதனம்.

IUD : ஐ.யு.டி. : உள்கருப்பைச் சாதனம் (Intrauterine device) என்பதன் சுருக்கம்.

IUGR : உள்கருப்பை வளர்ச்சிக் குறைவு.