பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



J

jaagsiekte : ஜாக்சியக்டே : செம்மறியாடுகளில் நுரையீரல் சுரப்பி நோய் உண்டாக்கி மரணம் விளைவிக்கும் ஒரு நோய்க் கிருமி. இது "நோயில் விரைவில் சாதல்" என்று பொருள்படும் ஒரு டச்சுச் சொல்.

Jaboulay's operation : ஜேபுலே அறுவை மருத்துவம் : தொடையைத் துண்டித்து, இடுப்பு எலும்பை அகற்றுதல். மேத்திர ஜேபுலே என்ற ஃபிரெஞ்சு அறுவை மருத்துவ வல்லுநர் பெயரால் அழைக்கப்படுகிறது.

Jaccoud's arthritis : ஜாக்கூட் மூட்டு அழற்சி : கீல்வாதக் காய்ச் சலின்போது அடிக்கடி உண்டாகும் நோய்க்குறி. இதில் உள்ளங்கை எலும்பு மூட்டுகளில் இயல்பு மீறிய நிலை உண்டாகும். சிக்மண்ட் ஜாக்கூட் என்ற ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பெயரால் அழைக்கப் படுகிறது.

jacket : பொதியுறை : 1. முதுகுத் தண்டு அசையாமலிருப்பதற்காக உடலின் மேற்பகுதியில் போடப்படும் பிளாஸ்டர் மேலுறை. 2. ஒட்டுப் பிசினாலான ஒரு செயற்கை மூடி.

jack in the box : குதிக்கும் பொம்மைப் பெட்டி : முடியைத் திறந்தவுடன் குதித்தெழும் பொம்மையுடைய ஒரு பெட்டி.

jack-knife position : கைப்பிடிக் கத்தி நிலை : முதுகு தரையில் படுமாறு படுத்தல். இதில் தோள்கள் உயர்ந்திருக்கும்,கால்கள் தொடைகளில் நிலை குத்தி நிற்கும்; தொடைகள் உடலுக்குச் செங்கோணங்களில் இருக்கும்.

jack screw : புதை திருகாணி : திருகிழைக் குதைகுழியின் ஒரு திருகாணியுடைய ஒரு சாதனம். பல்வளைவினை விரிவுபடுத்தவும், தனித்தனிப் பற்களை நகர்த்தவும், எலும்பு முறிவுக்குப் பிறகு எலும்புத் துண்டுகளை நிலையில் பொருத்தவும் பல் சீரமைப்பில் பயன்படுகிறது.

Jacksoncrib : ஜேக்சன் அடைப்பு : அடைப்பு வடிவக் கம்பிகள் மூலம் நிலையில் இருத்திவைக்கப்படும் அகற்றத்தக்கப் பல் சீரமைப்புச் சாதனம்.

Jacksonian epilepsy : ஜேக்சோனியன் காக்காய் வலிப்பு : இந்நோய், பிரிட்டிஷ் நரம்பியலறிஞர் ஜான் ஹங்ளிங்ஸ்