பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jail bars sign

606

Jarotzky's treatment


Jail bars sign : சிறைக்கம்பிக் குறியீடு : விலா எலும்புகளில் அடர்த்தியைக் காட்டும் மார்பு ஊடுகதிர்ப்படம். இதில் சிறைச் சாலைச் சன்னல் கம்பிகளைப் போன்று எலும்புகள் கிடை மட்டப்பட்டைகளாகத் தோன்றும் எலும்பு நலிவு நோய், அரிவாள் உயிரணுப் பற்றாக்குறை போன்ற நோய்களின்போது காணப்படுகிறது.

jakob-Creutzfeldt disease : ஜேக்கப்-குரூட்ஸ்ஃபெல்ட் நோய் : மனத் தளர்ச்சியினால் ஏற்படும் ஒருவகைப் பைத்தியம்.

Jamaican neuropathy : ஜமாய்க்கா நரம்பு நோய் : வெப்ப மண் டலத்தில் ஏற்படும் இசிப்புத் தசை வாத நோய் உணர்ச்சித் தள்ளாட்டம், பார்வை நரம்பு சூம்புதல், நரம்பு செவிடு ஆகியவை இதனுடன் சேர்ந்து உண்டாகும்.

Jamaican vomiting sickness : ஜமாய்க்கா வாந்தி நோய் : முற்றாத "ஆக்கி" மரப்பழத்திலிருந்து தயாரிக்கப்படும் சாராயத்தில் உள்ள "ஹைப்போகிளை சின்-ஏ" என்னும் பொருளால் உண்டாகும் கடுமையான வாந்தி: சோர்வு; வலிப்பு; குருதிக் குளுக்கோஸ் குறைபாடு.

James fibres : ஜேம்ஸ் இழைமம் : இதய மேலறையை ஏவி முடிச் சுடன் அல்லது "ஹிஸ்" தொகுதியுடன் இணைக்கும் துணைத் தொகுதி. இது நெஞ்சுப்பைத் துடிப்புகளைக் கடத்துவதற்கான வழி. இதனால், இவை மேலறைக் கீழறை முடிச்சினை தவிர்த்துச் செல்கின்றன. இது கீழறையின் தூண்டலுக்கு அனுமதிக்கிறது. இதனால், இதய விரைவுத்துடிப்பு ஏற்படுகிறது. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் டி.என். ஜேம்ஸ் விவரித்தார்.

Jamshed's needle : ஜாம்ஷெடி ஊசி : எலும்பு மச்சையில் துரப் பணத்திசு ஆய்வு நடத்துவதற்கான கருவி.

Jamsen's test : ஜேம்சன் சோதனை : கால்களைக் குறுக்காக வைப்பதற்கு இயலாமை. இதில் மாற்று முழங்கால் மீது கணுக்காலை வைக்க முடியாது போகும். எலும்பு மூட்டு வீக்கத் தின்போது அந்த நிலை உண்டாகிறது. டேனிஷ் அறுவைச் சிகிச்சை வல்லுநர் மர்க்ஜேன்சன் பெயரால் அழைக்கப்படுகிறது.

Janet's test : ஜேனட் சோதனை : கரிம உணர்ச்சியிழப்பை செயல் முறை உணர்ச்சியிழப்பிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதற்கான ஒரு சோதனை. ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் பியர் ஜேனட் பெயரால் அழைக்கப் படுகிறது.

Jarotzky's treatment : ஜாசேரட்ஸ்கு மருத்துவம் : குடற்புண்ணுக்குச் சீருணவு மருத்துவ முறை. இதில் முட்டை, பால், ரொட்டி, வெண்ணெய் அடங்கும். இதனை மாஸ்கோ மருத்துவ அறிஞர் அலெக்சாண்டர் ஜாசோட்ஸ்கி வகுத்துரைத்தார்.