பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Jatane operation

607

Jello sign


Jatane operation : ஜாட்டேன் அறுவை மருத்துவம் : நுரையீரல் தமனிகள், பெருந்தமனி ஆகியவற்றின் குருதி நாளப்பிணைப்பு.

jaundice : மஞ்சட்காமாலை; மஞ்சனம் : குருதியில் பிலிரூபின் அளவதிகமாவதால் உண்டாகும் நோய். இதனை வேதியியல் முறையில் மட்டுமே கண்டறிய முடியும். தோல் மஞ்சள் நிறமாதல், வெண்விழிப் படலம் மஞ்சள் நிறமாதல், சளிச்சவ்வு மஞ்சளடைதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள்.

Jaundice, infective : தொற்று மாலை.

Jaundice, harmolytic : குருதிச் சிதை மாலை.

Jaundice, hepatic : ஈரல் மாலை.

Jaundice, olestructive : தடை மாலை.

jaws : தாடை : பற்கள் உள்ளிட்ட வாய் எலும்புகள்.

jawbone : தாடை எலும்பு : கீழ்த் தாடை அல்லது மேல் தாடை எலும்பு.

JC virus : ஜே.சி, கிருமி : படிப்படியான வெள்ளையணு மூளை வீக்கம் உண்டாக்கும் கட்டிக் கிருமி.

jectofer : ஜெக்டோஃபர் : அயான் சோர்பிட்டால் கைட்ரிக் அமி லத்தின் வணிகப்பெயர். இது ஊசி வழியாகச் செலுத்தப்படுகிறது.

Jefferson's fracture : ஜெஃபர்சன் முறிவு : கழுத்து முள் எலும்பு வளையத்தில் ஏற்படும் எலும்பு முறி. முக்குளிப்பு விபத்துகளில் பெரும்பாலும் இது உண்டாகும்.

Jehovah's witness : ஜெகோவா சாட்சி : இரத்தத்தை அல்லது இரத்தப் பொருள்களை உட்செலுத்தத் தவறுவதால் எழும் பிரச்சினைகளிலிருந்து மருத்துவர்களை விடுவிக்கத் தனி இசைவு தெரிவித்து நோயாளிகளை கையொப்பமிட்டுக் கொடுத்தல்.

jejunal biopsy : சிறுகுடல் சவ்வு சோதனை : வயிற்று நோயை கண்டுபிடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் ஒருவகைச் சோதனை. இடைச்சிறுகுடல் சவ்வு சிறிதளவு வெட்டி எடுக்கப்பட்டு அதில் உயிர்ப்பொருள் ஆய்வு செய்யப்படுகிறது.

jejunostomy : இடைச்சிறுகுடல் அறுவை மருத்துவம் : இடைச் சிறு குடலுக்கும் முன் அடிவயிற்றுச் சுவருக்குமிடையில் உண்டாக்கப்பட்ட சூழல் உறுப்பு.

jejunum : இடைச்சிறுகுடல் நடுச் சிறு குடல்; இடைக் குடல் : இலியம் என்ற முற்பகுதிச் சிறு குடலுக்கும் சிறுகுடல் பின் பகுதிக்கும் இடையிலுள்ள சிறு குடலின் பகுதி இது 2.44 மி. நீளமுடையது.

Jello sign : ஜெல்லோ நோய்க் குறி : முதிர்கரு உறுப்பு அசைவு