பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jejunum

608

jigsaw puzzle tumour


களுடன் உண்டாகும் அண்டகோச ஊசலாட்டம். இது மீயொலி வரைவு மூலம் குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிய உதவுகிறது.

jelly : கூழ்மம்; இழுது; பாகு; களிம்பு.

Jelly, contracoptive : கருத்தடைக் கூழ்மம்; கருத்தடைக் களிம்பு.

jelly test : பாகுச் சோதனை; கூழ்ம ஆய்வு; இழுதுச் சோதனை : பழைய எலும்புருக்கி நோய் மருந்தின் பாகு வடிவம். இது குழந்தைகளுக்குத் தோளெலும்பு களுக்கிடையில் செலுத்தப்படுகிறது. அந்த இடத்தில் வீக்கம் ஏற்படுமானால், நோய் இருக்கிறது என்று பொருள்.

Jelonet : ஜெலோனெட்; மெழுகுத் துணி : கன்மெழுகு மென் கட்டுத் துணியின் வணிகப் பெயர்.

Jerk : சுருக்கதிர்வு; வெட்டிழுப்பு.

jerky pulse : வெட்டியிழுப்புத் துடிப்பு : குறுகலான இடது கீழறை வெளியேற்றத்தில் காணப்படும் அலை போன்ற துடிப்பு. கடும் இரைப்பைப் பின்னொழுக்கு, உறுப்புப் பெருக்கத் தடை இதயத்தசைக் கோளாறு, மாரடைப்பு ஆகியவற்றில் இது உண்டாகும்.

jet nebulizer : தாரைத் தெளிப்பான் : இது ஒரு ஈரநயப்பூட்டும் சாதனம். இது திரவத்தை மிக நுண்மையான தூசிப்படலத் துகள்களாக மாற்றுகிறது.

jet phenomenon : தாரை நிகழ்வு : ஒரு குறுகலான பேரியம் பத்தி. இதில் ஒர் உணவுக் குழாய் வலை காரணமாக உண்டாகும் இரைப்பை வாயில் சுருக்கத்திலிருந்து தாரையாக வழியும்.

jet ventilation : தாரைக் காற்றூட்டம் : ஈரநயப்புடைய வாயுவை மூச்சுக் குழாயினுள் அடிக்கடி அதிவேகத்தில் இடைவிட்டுச் செலுத்துதல். இவ்விதம் முக்கில் காற்றுப்பட ஊதும்போது கூடுதலாகப் புதிய வாயுவை உட்செலுத்தப்படுகிறது.

jigger : தோல் நோய் ஈ : தோலைத் துளைத்து நோய் உண்டாக்கும் வெப்ப மண்டல ஈ வகை.

jigsaw puzzle cells : திருகு வெட்டுப்புதிர் உயிரணுக்கள் : பல்வேறு வடிவளவிலும் உருவிலும் உள்ள தாறுமாறான கோணல்மானலான உயிரணுக்களை உண்டாக்குகிறது. பரம்பரையாக உண்டாகும் கடுமையான கோளச்சிவப்பணு அழிவில் ஏற்படுவது போன்று செயல்முறைச் சேதம் காரணமாக இது உண்டாகிறது.

jigsaw puzzle turnour : திருகு வெட்டுக் கட்டி : தோலில் ஏற்படும் குருதிக் குழாய்க் கட்டி. இது திகவியல் முறையிலான திசுத் தீவுகளை வெளிப்படுத்தும். இந்தத் திகத் தீவுகளில் பெரிய கருமையமும், புறப்