பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Job's syndrome

609

jointbreaker fever


பகுதியில் சிறிய கருமையான கருமையம் உடைய உயிரணுக்களும் அமைந்திருக்கும்.

Job's syndrome : ஜாப் நோய் : நோய்க்காப்புக் குறைபாடு காரணமாகத் தோலில் அடிக்கடி ஏற்படும் நோய். அதிக அளவு குருதி நீர் வடிதல், குறைபாடுடைய பல முனைக் கருவெள்ளணு, ஒற்றைக்கரு உயிரணு, உயிரணு இயக்கம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையது. விவிலியத்தில் வரும் ஜாப் என்னும் கதாபாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.

Joffory's sign : ஜாஃப்ரே நோய்க்குறி : கண்கள் திடீரென மேல் நோக்கித் திருப்பி, தலையைக் கீழ்நோக்கிக் குனியும் போது நெற்றியில் சுருக்கம் விழாதிருத்தல். இது கேடயச் சுரப்பி நோயின்போது காணப் படுகிறது. இதனை ஃபிரெஞ்சு மருத்துவ அறிஞர் அலெக்சிஸ் ஜாஃப்ரே என்பவர் விவரித்தார்.

jogger's heel : குதியோட்டக்காரர் பாதம் : குதிகாலை முடி இருக்கும் தடித்த இழைமத் திசுவில் ஏற்படும் எரிச்சல், குதியோட்டக்காரர்களின் குதிகால் முதலில் மேற்பரப்பைத் தொடும் போது இந்த எரிச்சல் உண்டாகிறது.

Johne's disease : ஜான் நோய் : கால்நடை காசநோயினால் கால்நடைகளில் ஏற்படும் குடல் அழற்சி ஜெர்மன் நோய் அறிஞர் ஹென்ரிக் ஜான் பெயரால் அழைக்கப்படுகிறது.

Johnson's method : ஜான்சன் முறை : பல்மருத்துவத்தில் வேர்க் குழிகளை பிலாஸ்டிக் பொருளினால் அடைத்தல்.

John's test : ஜான்சன் சோதனை : சிறுநீர் மாதிரியில் புரதம் இருப்பதைக் கண்டுபிடிக்கும் ஒருமுறை. இதில், ஒருவலுவான டிரினிட்ரோஃபினால் கரைசலை ஊற்றம்போது ஒரு வெண்மையான உறை பொருள் உண்டாகிறது. ஆங்கில மருத்துவ அறிஞர் ஜார்ஜ் ஜான்சன் இதனை விவரிக்கிறார்.

joint : மூட்டு : எலும்புப் பிணைப்பு: முட்டிணைப்பு மூன்று எலும்பு களின் மூட்டு.

joint, amicle : கணுக்கால் மூட்டு .

joint, ball and socket : பந்து கிண்ண மூட்டு.

joint, hinge : கீழ் மூட்டு .

joint, immovable : நிலை மூட்டு .

joint, knee : முழங்கால் மூட்டு .

joint, shoulder : தோள் மூட்டு .

joint, movable : அசை மூட்டு.

jointbreaker fever : மூட்டு முறிவுக் காய்ச்சல் : "ஒ'நியாங் நியாங்" என்னும் காய்ச்சல்.