பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

jugular glomus

611

junkfoed


jugular glomus : கழுத்து நரம்புத்திரள் : உள்கழுத்துச் சிரையின் மேல் குமிழின் குருதிக் குழாய் வெளிப்படலத்திலுள்ள 0.5 மி.மி. அளவுள்ள முட்டை வடிவக் கட்டமைப்பு. இது X ஆவது ix ஆவது மண்டையோட்டு நரம்பு தொடர்புடைய இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட திரள்களைக் கொண்டு இருக்கும்.

jumper syndrome : குதிப்பவர் நோய் : உயரத்திலிருந்து குதிக் கும்போது அல்லது விழும்போது ஏற்படும் உணர்வு மழுங்கிய அதிர்ச்சிக் கோளாறு. இதனுடன் சேர்ந்து பன்முக எலும்பு முறிவுகளும் ஏற்படும்.

jumping : குதித்தல் : பல படிகள் துள்ளிக் குதித்தல்.

junction : சேரிடம்.

Jung's method : ஜங் முறை : பகுப்பாய்வு உளவியல். சுவிஸ் உளவியலறிஞர் கார்ல் ஜங் பெயரால் அழைக்கப்படுகிறது.

Jungling's disease : ஜங்கிளிங் நோய் : காச நோயின் தோற்றத்தைக் குறிக்கும் துகள் கழலை. ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆட்டோ ஜங்கிளிங் பெயரால் அழைக்கப்படுகிறது.

junk food : கொழுப்பு உணவு . நிறையக் கொழுப்பும் சர்க்கரையும் அடங்கிய உணவு. இதில் சக்கை எதுவும் இராது.

junkfood : அலம்பு உணவு : மானோ சோடியம் கிளட்டா மேட் போன்ற வேதியியல் பொருள்கள் சேர்க்கப்பட்ட அலம்பு உணவு.

junctional tubule : இணைப்பு; நுண்குழல்.

junket : தயிர்க்கட்டி : மேலே பாலேடு கவித்த இனிப்பூட்டிய தயிர்க்கட்டி.

Jurisprudence : சட்டவியல்.

Jurisprudence, medical : மருந்துச் சட்டவியல்.

juvanile : இளம்; இளம் பருவம்; சிறார் : இளமைப் பருவத்துச் சிறப்பியல்பான பருவம்.

juxtangina : தொண்டை வீக்கம்; தொண்டையழல்.

juxta-ephiphyseal vessels : முனைவளரி அணுக்கக் குழல்கள்.

juxtaposition : அணுக்க விருப்பு.

juxtaspinal : முதுகெலும்பு அருகில்.

juxtavasical : சிறுநீர்ப்பை அருகில்.