பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kangri cancer

613

katabolism


மருத்துவம் மருத்துவர் தனக்குத் தானே செய்து கொள்ளும் அறுவை சிகிச்சை முறை. குடலிறக்கம், குடல்வால் அழற்சி ஆகிய நோய்களுக்காக ஒ'நெயில் கானே என்பவர் தனக்குத் தானே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். ஒரு விரலையும் துண்டித்துக் கொண்டார். அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

kangri cancer : காங்கிரிப் புற்று : சைனார் மரத்தினாலான காங்கிரிக் கூடையை வெதுவெதுப்புக்காக அடிவயிற்றில் அணிந்து கொள்வதால் உண்டாகும் வெப்பத்தின் தூண்டுதலால் ஏற்படும் செதில் படல உயிரணுத் தசைப் புற்று நோய். இது காஷ்மீரில் காணப்படுகிறது.

K antigen : 'கே' காப்புமூலம் : கிளப்சியல்லா, எஸ்கெரிஷியா கோலி போன்ற கிராம்-எதிர் படி பாக்டீரியாக்களின் மேற்பரப்பில் காணப்படும் காப்பு மூலங்கள்.

kaolin : காவோலின் : இயற்கையாகக் கிடைக்கும் அலுமினியம் சிலிக்கேட். வயிற்றுப் போக்கு, உணவு நச்சு ஆகியவற்றுக்கு வாய் வழி கொடுக்கப் படுகிறது.

kaposi's sarcoma : காப்போசிக் கழலை : உக்கிரத்தன்மையுடைய ஒரு வகைக் கழலை. இது முதலில் பாதங்களில் பழுப்பு நிற அல்லது கருஞ்சிவப்பு நிறப்படலமாகத் தோன்றித் தோல் முழுவதும் பரவுகிறது. இது, "எயிட்ஸ்" என்னும் ஏமக்குறைவு நோயைக் கடுமையாக்கும் என இப்போது கருதப்படுகிறது.

kartagener's syndrome : கார்ட்டாஜினர் நோய் : இது ஒரு கண்ணிமை இயங்கா நோய், சுவிஸ் மருத்துவ அறிஞர் மானெஸ் கார்ட்டாஜினர் இதனை விவரித்துக் கூறினார். இதய இடமாற்றம், மூச்சு நுண்குழாய் விரிவடைதல், காற்றறை அழற்சி, மலட்டுத் தன்மை ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படும்.

karyolymph : கருமையத் திரவம் : ஒர் உயிரணுவின் கருமையத்தின் திரவப்பகுதி.

karyoplasm : கருமைய குருதிநீர் : உயிரணுக் கருமையத்தின் குருதிநீர்.

karyopyknosis : கருமையச் சுருக்கம் : குரோமாட்டின் செறி வடைவதால் உயிரணுக் கருமையம் சுருங்குதல்.

karyosome : குரோமாட்டின் திரள் : உயிரணுவின் குரோமாட்டின் வலைப் பின்னலில் பரந்து கிடக்கும் ஒருங்கற்ற, செறிவடைந்த குரோமாட்டின் திரள்கள்.

katabolism : ஊன்மச் சிதைவு; உயிர்ச்சத்துக் கட்டழிவு.