பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

katayama fever

614

Kell blood group


katayama fever : கட்டாயாமாக் காய்ச்சல் : நத்தைக் கிருமியினால் உண்டாகும் கடுமையான முழு உடல் நத்தைக் கிருமி நோய். இது குருதிநீர் நோய் போன்றது. ஐப்பானில் கட்டாயமாக ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நோய் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

kation : எதிர் துள்ளணு.

katolysis : வேதியியல் பொருள் சிதைவு : சீரணத்தில் நடை பெறுவது போன்று சிக்கலான வேதியியல் பொருள்கள் அரை குறையாகச் சிதைந்து எளிமையான கூட்டுப்பொருள்களாக மாறுவது.

Kawasaki disease : காவாசாக்கி நோய் : தோல் நிணநீர்க் கரணை நோய். இது 5 வயதுக் குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும். இதனுடன் சேர்ந்து கடும் காய்ச்சல், வேனற்கட்டி, கண் சவ்வழற்சி, கழுத்து நிணநீர் கரணை விரிவாக்கம் ஆகியவை உண்டாகும். இதனை முதன் முதலில் ஐப்பானியக் குழந்தை மருத்துவ அறிஞர் தோமாசாக்கு காவாசாக்கி விவரித்துக் கூறினார். ஆஸ்பிரின் மருந்தினைக் கொடுத்து இதனைக் குணப்படுத்தலாம்.

kay's test : கேய் சோதனை : பெருகுவிக்கும் ஹிஸ்டாமின் சோதனை.

Kearn's syndrome : கீயான் நோய் : புறக் கண்தசை வாதம், நிறமிச் சீரழிவு, இதயத் தசைக் கோளாறு ஆகிய நோய்கள்.

Kegel exercises : கெஜல் பயிற்சிகள் : பெண்களிடம் கட்டுப்பாடிழந்த அழுத்தத்தைக் கட்டுப் படுத்துவதற்காக இடுப்புயோனிக் குழாய்த் தசைகளை யும் இடுப்புத் தளத்தையும் வலுப்படுத்துவதற்கான குறிப்பிட்ட பயிற்சிகள். இந்தப் பயிற்சிகளை மகளிர் மருத்துவ அறிஞர் ஆர்னால்டகெஜல் முதன் முதலில் வகுத்தார். அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

keflex : கெஃப்ளெக்ஸ் : செஃபாலெக்சின் மெனோ ஹைட்ரேட் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

kelfizine : கெல்ஃபிசின் : சல்ஃபா மெட்டோபைசின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

Kell blood group : கெல் இரத்தக் குழுமம் : மனித இரத்தக் குழு மங்களில் ஒன்று. இதில் குருதி உயிரணு காப்பு மூலங்கள் ('k' மரபணு) இருக்கும். இது தற்காப்புமூலத்துடன் வினைபுரிகிறது இது குருதிச் சிவப்பணுச்சிதைவு நோயை உண்டக்குகிறது. இந்தத் தற்காப்பு மூலங்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நோயாளியின் பெயரால் அழைக்கப்படுகிறது.