பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

keratoconus

616

keratotomy


keratoconus : விழி வெண்படல பிதுக்கம்; கூம்பு விழி : விழி வெண்படலம் கூம்புபோல் பிதுக்கமடைந்திருத்தல்.

keratocyte : கொம்புப் பொருள் சிவப்பணு : ஒன்று அல்லது இரண்டு வடுக்கள் அல்லது கொம்புகள் உள்ள சிவப்பணுக்கள். குருதி நாளத்தினுள் உள்ள ஃபைபிரின் என்ற கசிவு ஊனீர் சரங்கள் வழியாகச் சிவப்பணுக்களைத் திணித்து உட்செலுத்தும்போது இந்த நிகழ்வு உண்டாகிறது.

keratoderma : தோல் மிகை வளர்ச்சி : 1. தோலின் கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி, 2. கொம்பு போன்ற தோல், 3. மிகைப் பொருமல்.

keratoiritis : விழித்திரை வீக்கம்; விழித்திரை அழற்சி : விழிவெண் படலமும் விழித்திரைப் படலமும் வீக்கமடைதல்.

keratolytic : தோல் மென்மையாக்கும் மருந்து : தோலின் மேல் படலம் உரிந்து, மென்மையாவதற்கு உதவும் மருந்து சாலி சிலிக் அமிலம், ரிசோர்சின், யூரியா, சோடியம் ஹைடிராக்சைடு, பொட்டாசியம் ஹைடி ராக்சைடு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு.

keratomalacia : ஒளிப்படலச் சிதைவு விழிவெண் படல நலிவு; விழி நைவு : வைட்டமின்-A குறைபாடு காரணமாக, விழிவெண்படலம் நலிவடைதல்.

keratome : விழி அறுவைக் கத்தி; விழி வெட்டி : விழி வெண்பட லத்தைக் கீறுவதற்கு ஏற்றவாறு ஒரு சட்டுவக் கரண்டியுடைய ஒரு தனிவகைக் கத்தி.

keratometer : விழிவெண்படல அளவுமானி : விழிவெண்படலத்தின் முன்புற மேற்பரப்பின் வளைவினை அளவிடுவதற்கான ஒரு கருவி.

keratopathy : விழிவெண்படல நோய்; விழி நோய்.

keratophakia : விழியாடி பொருத்துதல் : தொலைப் பார்வைக் கோளாறினைச் சரிப்படுத்துவதற்காக விழி வெண்படலத்திற்குள் உயிரியல் முறை ஆடியை அறுவை மருத்துவம் மூலம் பொருத்துதல்.

keratoplasty : ஒளிப்படல ஒட்டு.

keratoscope : விழி வெண்படல சமச்சீர்மை அளவுமானி : விழி வெண்படலத்தின் வளைவின் சமச்சீர்மையை அளவிடுவதற்கான கருவி.

keratosis : தோல் புடைப்பு; முள் உரு வளர்ச்சி; கரடு தட்டல் : தோலின் கொம்புப் படுகைத் தடிமனாதல். இது பாலுண்ணி போல் புடைப்பாகத் தோன்றும்.

keratotomy : ஒளிப்படலவெட்டு.