பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

kerecid

617

ketoprofen


kerecid : கெரசிட் : ஐடோக்குரிடின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

kerion : உச்சித் தோல் சீழ்க்கட்டி; மண்டைத்தோல் சீழ்க்கட்டி; தலை தோல் கட்டி; சீழ்ச்கூடு : உச்சி வட்டக்குடுமித் தோலில் ஏற்படும் சதுப்புத் தன்மையுடைய சீழ்க்கட்டி இது முடியின் படர் தாமரை நோயுடன் தொடர் புடையது.

kernicterus : காமாலை மூளைக் கோளாறு; பித்தநீர் மாசுபாடு : மூளையில் அடி நரம்புக்கணுவில் பித்தநீர் மாசுபடுதல். இதனால் மனக்கோளாறு ஏற்படக்கூடும்.

kernig's sign : முழங்கால் மூட்டு வளைவு : தொடை இடுப்புப் பகுதிக்குச் செங்குத்தாக வளைந்திருக்கும் போது முழங்கால் முட்டிக்காலை நீட்டுவதற்கு இயலாதிருத்தல், தண்டு மூளை கவிகைச் சவ்வழற்சியின் போது இது ஏற்படுகிறது. கெர்னிக் விளக்கியது.

Keshan disease : கேஷான் நோய் : நீரில் செலினியம் குறைவாக இருத்தல். இதனால் விரிவடைந்த இதயத்தசைக் கோளாறு, தகட்டணுக்கள் திரட்சி உண்டாகும். இது சீனாவிலுள்ள கேஷான் மாநிலத்தில் காணப் பட்டது.

ketalar : கேட்டலார் : கேட்டாமின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

ketamine : கேட்டாமின் : நரம்பு வழியாகச் செலுத்தப்படும் நோவகற்றும் மருந்து.

ketoaminoacidaemia : பாகுச் சிறுநீர் நோய் : சர்க்கரைப் பாகு போன்ற சிறுநீர் வெளியேறும் நோய்.

ketonaemia : குருதிக் கரிமச் சேர்மம் : இரத்தத்திலுள்ள கரிமச் சேர்மப் பொருள்கள்.

ketone bodies : குருதிக் கரிமப் பொருள்கள் : அசிட்டோன், அசிட்டோஅசிட்டிக் அமிலம், பீட்டா ஹைடிராக்சிபுட்ரிக் அமிலம் போன்ற பொருள்கள். இவை கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்திலுள்ள இடைநிலை கரிம மூலக்கூறுகள். இவை பட்டினி, நீரிழிவு நோய், குறைபாடுடைய கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம் போன்றவற்றில் உளவியல் தற்காப்புகள் ஆகும்.

ketonuria : சிறுநீர் கரிமச் சேர்மம் : சிறுநீரில் கரிமச் சேர்மப் பொருள்கள் இருத்தல்.

ketoprofen : கேட்டோபுரோஃபென் : வீக்கத்தை குறைத்து நோவகற்றும் மருந்து. கீல்வாதம், வாதம் போன்ற வற்றுக்குப் பயனுடையது.