பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ketosis

618

kidney


ketosis : குருதிக் கரிமச் சேர்மத் திரட்சி : இரத்தவோட்டத்தில் கரிமச் சேர்மப் பொருள்கள் அதிகமாகச் சேர்ந்திருத்தல்.

ketotifen : கேட்டோடிஃபென் : வீக்கத்தைக் குறைத்து நோவகற்றும் மருந்து. இது புறஇயக்க மூச்சுக் குழாய் ஈளை நோய் (ஆஸ்துமா). இது ஹிஸ்டாமினிக் எதிர்ப்பு, குரோமோலின் போன்ற குணங்களை உடையது. இது சிவப்பூதாச்சாய உயிரணு இயக்கத்தையும் மிகையுணர்வு வளர்ச்சி யையும் மட்டுபடுத்துகிறது.

ketovite : கேட்டோவைட் : வைட்டமின் C, B1, B6 ஃபோலிக் அமிலம் ஆகியவை அடங்கியுள்ள மாத்திரை மற்றும் திரவத்தின் வணிகப்பெயர்.

khaini cancer : கெய்னிப் புற்று : ஆண்களிடம் வாய்க்குழாயினுள் செதில்படல உயிரணு எலும்புப் புற்று. இதில் கீழ்ப்பல்லெலயிறு முகட்டுப் பகுதியில் சுண்ணாம்பு, புகைபடிந்திருக்கும். இது, இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் காணப்படுகிறது.

kidd blood group : “கிட்" குருதி குழுமம் : இது சிவப்பணுக் காப்பு மூலம் (ஜே.கே, மரபணு). இது தற்காப்பு மூலங்களுடன் (ஜே.ஜே. எதிர்ப்பு) வினை புரிகிறது. முதன் முதலாக இது எந்த நோயாளியிடம் கண்டு பிடிக்கப் பட்டதோ அந்த நோயாளியின் பெயரால் அழைக்கப் படுகிறது.

kidney : சிறுநீரகம்; சிறுநீர் வடிப்பி : இரத்தத்திலிருந்து கழிவுப் பொருளைப் பிரித்துச் சிறுநீராக்கி வெளியேற்றும் உறுப்பு.