பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/622

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Kline test

621

koilocystosis


ஆண்முலைப் பெருக்கம், இரு பால் உயிரணு உறுப்பு இயக்கு நீர் சிறுநீரில் கழிதல் ஆகிய கோளாறுகள் உண்டாகும்.

Kline test : கிளைன் சோதனை : மேக நோயைக் கண்டுபிடிப் பதற்கான துகள் திரள் படலச் சோதனை. பெஞ்சமின் கிளைன் என்ற நோயியலறிஞர் பெயரால் அழைக்கப்படுகிறது.

klumpke's paralysis : முடக்கு வாதம் : கை மற்றும் முன்கைத் தசையில் முடக்குவாதம் ஏற்பட்டு மெலிதல். மேற்கை நரம்புகள், கழுத்துப் பரிவு நரம்புகள் ஆகியவற்றின் அடிவேர்களில் காயம் காரணமாக உணர்வு மற்றும் கண்பார்வைக் கோளாறுகள் உண்டாகின்றன. கிளம்ப்சே விவரித்தது.

knee : முழங்கால்; முழங்கால் மூட்டு; முட்டி : துடையெலும்பின் கீழ்முனை, முன் கால் எலும்பின் தலைப் பகுதி இவை இணையும் கீல்மூட்டு.

knee-joint : முழங்கால்; மூட்டு; மூட்டிணைப்பு.

knock-kneel : தொற்றுக் கால் உடைய : நடக்கும்போது ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் முட்டிக் கால்கள்.

knife : நறுக்கி; கத்தி.

knife, imputation : வெட்டரி.

knife, cataract : புரையரி.

knock, knee : முட்டுக்கால்.

knot : முடிச்சு.

knuckle : விரல் கணு.

knuckles : கைமுட்டி; விரல் முட்டி : கைவிரல்களுக்கும் உள்ளங்கை எலும்புகளும் இணையுமிடையிலான பின்புறப் பகுதி.

Koch's phenomenon : கோச் நிகழ்வு : முன்னர் காச நோய்க் கிருமி பீடித்த சீமைப் பெருச்சாளியில் மீண்டும் அந்த நோய்க் கிருமியை ஊசி மூலம் செலுத்திய பிறகு ஏற்படும் மாறுபட்ட விளைவு.

Kohler's bone disease : கோஹ்லர் எலும்பு நோய் : 1. குழந்தை களின் கை-காலில் உள்ள தோணி போன்ற எலும்பில் ஏற்படும் அழற்சி, 2. இரண்டாவது அடிக்கால் எலும்பின் இணைத் தண்டு வீக்கமடைதல்.

kohler's bone disease : எலும்பு வீக்கம் : கைகால்களிலுள்ள படகு வடிவ எலும்பில் ஏற்படும் வீக்கம். இது 3-5 வயதுக் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

koilocystosis : கரண்டிநக நீர்கட்டி : கரண்டிநக நீர்க்கட்டி ஏற்படுதல். இதில் தெளிவான திசுப் பாய்மம், நிறமிக் குறைபாட்டுக் கருமையம் ஆகியவற்றுடன் தொய்புழை உண்டாகும்.