பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

labiopalatine

627

labyrinth


labiopalatine : உதடு-அன்னம் சார்ந்த: உதடுகள் மற்றும் அண்ணம் தொடர்புடைய.

labioplasty : உதடு பிளாஸ்டிக் அறுவை : ஒர் உதட்டில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை செய்தல்.

labioversion : பல் இடம் பெயர்வு : ஒரு பல் உள்துளை அமைப்பு வரிசையிலிருந்து உதடுகளால் இடம் பெயர்ந்திருத்தல்.

labium : உதடு; இதழ்.

laboratory : ஆய்வுக்கூடம்.

labarotory-clinical : மருந்து ஆய்வுக்கூடம்.

labour : பேறு.

labour, delayed : தாமதப் பேறு.

labour, difficult : இடர்ப் பேறு.

labour, obstructed : தடைப்பேறு.

labyrinth : உட்காதுத் துளை; சுருள் புழை; உட்காது; காதுத் திரிபுத் துளை; செவி வளை : உட்காதின் திருக்கு மறுக்கான துளை.

labour : பிள்ளைப் பேற்று வலி; பேறுகை வலி : குழந்தைப் பிறப்பதற்குஉண்டாகும் இடுப்பு வலி. முதற்கட்டத்தில் கழுத்துப் பகுதி முழுமையாக விரிவடைகிறது. இரண்டாம் கட்டத்தில் குழந்தை வெளிவருகிறது. மூன்றாம் கட்டத்தில் நச்சுக்கொடி வெளியேற்றப்படுகிறது.

labyrinth : உட்காது : 1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாறை போன்ற பகுதிக்குள் அமைந்திருக்கும். 2. அரைவட்டக் குழாய்கள், ஊடுதாய்க் குழாய்கள், சுருள் வளைகள் அடங்கிய உட்காது.