பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

laryngoscopy

633

lassar's paste


நீண்ட கைப்பிடியுடைய கண்ணாடியின் உதவியுடன் குரல் வளையின் உட்பகுதியை ஆய்வு செய்தல் தொடர்புடைய.

laryngoscopy : குரல்வளை ஆய்வு : குரல்வளை ஆய்வு கருவி மூலம் குரல்வளையைப் பார்த்து ஆய்வு செய்தல்.

laryngotomy : உட்குரல்வளை அறுவை மருத்துவம்; குரல் வளை வெட்டு; மிடற்றுத் திறப்பு : வெளி லிருந்து குரல் வளையின் உட் பகுதியில் வெட்டும் அறுவை மருத்துவ முறை

laryngotracheitis : குரல்வளை மூச்சுக் குழாய் அழற்சி : குரல் வளையிலும் குரல்வளைப்பை தொடரும். மூச்சுக் குழாயிலும் ஏற்படும் வீக்கம்.

laryngotracheo bronchitis : சுவாச குழாய் வீக்கம்; மூச்சுக் குழல் அழற்சி : குரல்வளை, குரல்வளைக் குழாய், மூச்சுக் குழாய்கள் ஆகியவற்றில் ஏற்படும் வீக்கம்.

larynx : குரல்வளை : குரலை உண்டாக்கும் குருத்தெலும்பு சார்ந்த கட்டமைப்பு. குரல் வளைக்கும், மூச்சுக் குழாய்க்கு மிடையில், மூன்றாவது, ஆறாவது கழுத்து முள்ளெலும்பு நிலையில் இது அமைந்துள்ளது. இதில் மூச்சுக் குழாயின் மேல் முனையைச் சுற்றி தனித்தனிக் கூறுகளால் இணைக்கப்பட்ட ஏராளமான குருத்தெலும்புகள் அமைந்துள்ளன.

lasen syndrome : மூட்டுப் பிறழ்ச்சி : பன்முக மூட்டுப் பிறழ்ச்சிகள். லேசன் விவரித்தது.

laser : லேசர் கற்றை; வீச்சுமிழ் ஒளி : தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின் மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை உறையவைக்கிறது. இது புற்று நோய் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அறுவைக்கும் பயன்படும்.

lass : சிறுமி; பெதும்பை.

Lassa fever : குருதிப் போக்குக் காய்ச்சல் : கிருமிகளினால் உண்டாகும் இரத்தப் போக்குக் காய்ச்சல்களில் ஒன்று. இது பீடித்த 3-16 நாட்களில் அறிகுறிகள் (குடற்காய்ச்சல், டைஃபாய்டு) குருதி நச்சூட்டு போன்ற நோய்களில் நோய்க் குறிகள் தோன்றும். ஆறாம் நாள் வாயிலும் தொண்டைப் புண்கள் உண்டாகும். இந்நோய் கண்டவர்களில் 67% பேர் இறந்து விடுகிறார்கள். இந் நோயாளிகளைத் தனிமைப் படுத்தி மருத்துவமளிக்க வேண்டும்.

lassar's paste : லேசர் பசை : துத்தநாக ஆக்சைடு மாவுப் பொருள். சாலிசலிக் அமிலம் ஆகியவற்றை மென் கன்மெழுகில் கலந்த பசை மருந்து. படை