பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lasstitude

634

LE


நோய்க்குப் பயன்படுத்தப்படு கிறது.

lasstitude : களைப்பு; சோர்வு.

latency : உள்மறைக் காலம் : தூண்டுதலுக்கும் துலங்கல் இயக்கத்துக்குமிடையில் செயலற்ற ஒரு கால அளவு.

latent : மறைந்துள்ள.

latent heat : உட்செறி வெப்பம்; மறைந்துள்ள வெப்பம் : புதை சூடு, வெப்ப நிலை மாறாமல், பொருளின் நிலையில் மாறுதல் ஏற்படுத்தும் வெப்பம்

lateral : நடுவிலகிய வெளிப்பக்க.

latex fixation test : ரப்பர் பால் நிலைப்பாட்டுச் சோதனை : குருதி யணு ஒட்டுத்திரட்சிக்கு காப்பு மூலம் தடவிய ரப்பர் பால் துகள்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் குருதி நீரியல் சோதனை.

latrine : ஒதுங்கிடம்; கழிப்பிடம்; கழிவிடம்.

lattice : வலைப் பின்னல் : ஒன்றோடொன்று செங்கோணத்தில் பின்னிப் பிணைந்த கட்டமைவு மூலம் அமைந்த வலைப் பின்னல் அமைப்பு.

laudanum : சாராய அபினிக் கரைசல் : சாராய அபினிக் கரைசலின் பழைய பெயர்.

laughing death : சிரிக்கும் மரணம் : 'குரு' என்ற நோயின் இறுதி நிலைகளில் ஏற்படும் கட்டுப்படுத்த முடியாத கட்டாயச் சிரிப்பு.

laughter : நகைப்பு : உணர்ச்சியை, பொதுவாக மகிழ்ச்சியை வெளி படுத்தவதற்கு எழுப்பப்படும் தெளிவில்லாத ஒலிகள்.

lavage : கழுவல்.

lavement : குடல் கழுவல்.

laxatives : பேதி மருந்துகள்; மல மிளக்கிகள் : குடலிளக்க மருந்து கள், மலச்சிக்கலின் போது மலத்தை இளக்கி எளிதாக வெளியேற்றுவதற்குப் பயன் படுத்தப்படும் மருந்துகள்.

layer : அடுக்கு : ஒரே சீரான கனமுடைய மெல்லிய தகடு போன்ற கட்டமைப்பு.

lazar : தொழுநோய்.

lazaret : தொற்று மருத்துவமனை.

lazy leucocyte syndrome : மந்த வெள்ளையணு நோய் : குழந்தைகளுக்கு ஏற்படும் தடைக்காப்பு குறைபாட்டு நோய். பலமுனை வெள்ளைக்கரு வெள்ளணுக்குறைபாட்டினால் இது உண்டாகிறது. இதனால் சீழ் சார்ந்த புண் உண்டாகும்.

LE : தோல்படை உயிரணுக்கள் : தோல் படை நோய்கண்ட நோயாளிகளிடம் காணப்படும் உயிரணுக்கள்.