பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lead

635

Leishman- Donovan...


lead : ஈயம்; காரீயம் : நச்சு உப்புகள் உள்ள மென்மையான உலோகம். இதனால் தோலில் கொப்புளம், வலி, வீக்கம் உண்டாகும். இதைக் குணப்படுத்த அபினி தடவுகிறார்கள்.

Leber's optic atrophy : லெபர் பார்வை நலிவு : பார்வை நரம்புகளில் பரம்பரையாக ஏற்படும் நலிவு. இதனால் வயது வந்த இளம் ஆண்கள் வேகமாகப் பார்வை இழக்கிறார்கள். ஜெர்மன் கண் நோயியலறிஞர் தியோடார் லெபர் பெயரால் அழைக்கப்படுகிறது.

lecithinase : லெசித்தினேஸ் : லெசித்தின் ஆக்கச் சிதைவினை ஊக்குவிக்கும் ஒரு செரிமானப் பொருள்.

Lederfen : லெடெர்ஃபென் : ஃபென்பூஃபென் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

Ledermycin : லெடெர்மைசின் : டிமெத்தில் குளோர்டெட்ரா சைக்ளின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

leg : கால்.

leg, white : வெளிர்கால்.

leech : அட்டை; சூப்பட்டை : குருதி உறிஞ்சும் நீர்வாழ் உயிரினம்.

Legg-Perthes disease : லெக்-பெர்த்தெஸ் நோய் : தொடை யெலும்பின் தலைப் பகுதியில் ஏற்படும் எலும்பு முளைத் தசையழுகல் நோய். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஆர்தல் லெக், ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜார்ஜ் பார்த்தெஸ் இருவரும் இதனை விவரித்துக் கூறினர்.

legislation public health : மக்கள் நல்வாழ்வுச் சட்டம்.

legumen : பயற்றங்காய் : உணவாகப் பயன்படும் பயற்றினச் செடியின் பகுதி.

legumes : பயற்றினம்; அவரையினம் : பட்டாணி, அவரை, மொச்சை போன்ற பயற்றினை தாவரங்கள்.

leiomyoma : இழைமத்திசுக்கட்டி : சிறிதளவு இழைமத் திசுக்களுடைய மிருதுவான தசையில் ஏற்படும் உக்கிரமற்ற கட்டி.

leiomyosarcoma : மிருதுத்தசை உக்கிரக்கட்டி : மிருதுத்தசையில் ஏற்படும் உக்கிரமான கட்டி.

Leishman-Donovan bodies : லெயிஷ்மான்-டோனோவான் திரட்சி : கருங்காய்ச்சல் எனப்படும் 'காலா-அசார்' என்ற நோய் பீடித்த நோயாளியின் குருதியோட்ட மண்டல உயிரணுக்களில் காணப்படும் சிறிய வட்டமான அல்லது முட்டை வடிவத் திரட்சி. வில்லியம் லெபிஷ்மான் என்ற ஆங்கிலேய இராணுவ அறுவைச் சிகிச்சை வல்லுநர், அயர்லாந்து மருத்துவ