பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lesion

638

leucopaenia


lesion : நைவுப் புண்; சிதைவுப் புண்; நசிவுப் புண்; உருக்குலைவு புண்; நோய்ப் பழுது; நோயகம் : உறுப்புகள் (திசுக்கள்) சிதைவுறுவதால் உண்டாகும் உறுப்புக் கோளாறு.

lessen : சிறிய.

lethal : கொல்லும்.

lethologica : நினைவின்மை : ஒரு சொல்லை, பெயரை அல்லது விரும்பிய செயலை நினைவில் வைத்துக்கொள்ள முடியாத தற்காலிக இயலாமை.

leucine : லியூசின் : இன்றியமையாத அமினோ அமிலங்களில் ஒன்று.

leucoblastosis : முதிரா உனீர் நுண்மப் பெருக்கம் : முதிர்ச்சியற்ற ஊனீர் நுண்மம் இயல்புக்கு அதிகமாகப் பரவுதல்.

leucocidin : லியூக்ககோசிடின் : கிருமிப் புற நச்சு. இது இரத்த வெள்ளணுக்கள் சிலவற்றை அழிக்கிறது.

leucocyte : வெள்ளையணு .

leucocytes : உனீர் நுண்மம்; குருதி வெள்ளையணுக்கள்; வெள்ளையணுக்கள் : குருதியின் நிறமற்ற நுண்மம். இது வெள்ளை அணுக்கள் ஆகும்.

leucocytosis : வெள்ளையணுப் பெருக்கம்.

leucocytolysis : வெள்ளையணு அழிவு; வெள்ளையணு முறிவு : இரத்தத்திலுள்ள வெள்ளை யணுக்கள் சிதைவுற்று அழிதல்.

leucocitosis : மிகை வெள்ளணுக்கள்; வெள்ளையணுப் பெருக்கம்; வெள்ளையணுவேற்றம் : இரத்தத்தில் வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகமாதல். நோய் தொற்றும் போது இது உண்டாகும்.

leucoderma : பாண்டு நோய் (வெண் குட்டம்); வெண் தோல்; வெண் திட்டு : தோலில் நிற நுண்மம் (நிறமி) இல்லாமையால் உண்டாகும் நிறமின்மை நோய்.

leucodystrophy : மூளை வெண் பொருள் சீர்கேடு : மூளையிலுள்ள வெண்பொருள் சீர் கெடுதல்.

leucoma : விழி வெண்புள்ளி; வெண்புரை : விழி வெண்படலத்தில் ஒளி ஊடுவிச் செல்லாத வெண்புள்ளி.

leuconychia : நக வெண்புள்ளி; நக வெண் பொட்டு : நகங்களில் காணப்படும் வெண்புள்ளிகள்.

leucopathy : பாண்டு நோய்த்தன்மை : நிற நுண்மமற்ற தன்மை.

leucopedesis : ஊனீர் நுண்மக் கசிவு : குருதி நாளங்களின் சுவர்களின் வழியாக ஊனீர் நுண்மங்கள் கசிந்து செல்லுதல்.

leucopaenia : வெள்ளணுக் குறைபாடு; வெள்ளையணுவிறக்கம் : இரத்தத்திலுள்ள வெள்ளணுக் களின் எண்ணிக்கை குறைதல்.