பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

actinomycete

63

action-involuntary


சியோ மற்றும் ஸ்ட்ரெப் டோமைசிடேசியோ நுண்ணுயிரி குடும்பங்களை உள்ளடக்கிய நுண்ணியிரி இனம்.

actinomycete : ஆக்டினோமைசீட் :ஆக்டினோ மைசிடாலிஸ் இனப்பிரிவைச் சார்ந்த நுண்ணுயிரி.

actinomycin : ஆக்டினோமைசின் : வீரிய நச்சு நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து. பல நுண்ணுயிர்களுக்கு எதிராகச் செயல்படக்கூடியது. சமயங்களில் புற்றுக்கொல்லியாகவும் பயன்படும்.

actinomycosis : கதிர்வீச்சு ஒட்டுயிர் காளான் நோய் : ஒளிக்கதிர் வீசும் ஒட்டுயிர்க் காளானால் தோன்றும் ஒரு வகை நோய். இந்நோய், நுரையீரல், தாடை, குடல் ஆகிய உறுப்புகளை முக்கியமாகப் பாதிக்கிறது. இந்நோயினால், சிறு மணிகள் போன்ற கட்டிகள் தோன்றி, அவற்றிலிருந்து மஞ்சள் நிறக் கந்தகக் குருணைகள் அடங்கிய திண்மையான எண்ணெய்ப் பசையுள்ள சீழ் வெளிப்படுகிறது.

actinopraxis : ஊடுகதிர் மருத்துவம்; கதிர்வீச்சு மருத்துவம்.

actinotherapy : ஒளி மருத்துவம் : அகச்சிவப்பு அல்லது புறவூதா ஒளிக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் மருத்துவ முறை.

action : உறுப்பு இயக்கம் :உடலின் ஏதேனுமொரு பகுதியின் செயல்முறை அல்லது அலுவல் பணி, எதிரெதிர்க் குழுமத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் தசைகள் எதிர்வினையைச் செய்கின்றன. ஒருவரின் சொந்த விருப்பத்திற்கு எதிரான கட்டாய வினையை இன்னொரு தசை செய்கிறது. சொந்த விருப்பின் பேரிலன்றி, திடீர் உந்துதல் காரணமாகத் தூண்டுவிசை வினை நடைபெறுகிறது. இணைவிழைச்சு போன்ற நரம்புக் கிளர்ச்சிக்கு இணங்கத் தன்னியல்பாகத் தூண்டப்படும் உள்ளுறுப்பியக்கச் செயல்கள் தன்னியல்பு வினைகளாகும். தனியாகச் செயல் புரிய முடியாமல், இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட தசைகளின் ஒத்துழைப்பினால் நடைபெறுவது இணைவு வினையாகும்.

action automatic : தன்னியக்கச் செயல்.

action cumulative : கூட்டு விளைவுச் செயல்.

action delayed : சுணக்கச் செயல்.

action-direct : நேர்செயல்.

action-local : தனியிடச் செயல்.

action-involuntary : இயல்வினை.