பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

levallorphan

640

libido


செயலூக்கம் நிறைந்த பொருள்கள். இவை வீக்கம், ஒவ்வாமை ஆகியவற்றில் இடையீட்டுப் பொருளாகச் செயற்படுகின்றன.

levallorphan : மயக்க எதிர்ப்பு மருந்து : மயக்க மூட்டும் மருந்தின் செயலாற்றலை எதிர்க்கும் மருந்து.

levamisole : லெவாமிசோல் : குடற்புழு அகற்றும் செயற்கை மருந்துப் பொருள். இதனால் நச்சு விளைவுகள் ஏற்படுவதில்லை.

levator : தூக்குவிசைத் தசை; உயர்த்தி; தூக்கி : உறுப்பினை உயர்த்தும் தசை.

Levin's tube : லெவின் குழாய் : ஒருவகைப் பிளாஸ்டிக் செருகு குழாய். குடல் அறுவைச் சிகிச் சையின் போது குடலிலுள்ள திரவங்களையும் வாயுவையும் அகற்றவதற்காக முக்கின் வழியாக இரைப்பையினுள் முன் சிறுகுடல் வரைச் செருகப் படுகிறது அமெரிக்க மருத்துவ அறிஞர் ஆபிரகாம் ரெனின் பெயரால் அழைக்கப்படுகிறது.

levocardia : இதய இயல்புநிலை : உள்ளுறுப்புகளின் உறுப்புகள் இயல்பான நிலையில் இருக்கும் போது இதயத்தின் இயல்பான நிலை.

lewodopa : லெவோடோப்பா : அசையா நடுக்கம் எனப்படும் பார்க்கின்சன் நோயைக் குணப்படுத்துவதில் பயன்படுத்துவதில் தீவிரத்தன்மையுடைய , இயற்கையாகக் கிடைக்கும் அமினோ அமிலம்.

levonorgestrel : லெவோனோர் ஜெஸ்ட்ரெல் : வாய்வழி உட் கொள்ளப்படும் கருத்தடை மருந்தாகப் பயன்படும் ஒர் இயக்குநீர் (ஹார்மோன்).

Levophed : லெவோஃபெட் : நோராட்ரனலின் என்ற மருந்தின் வணிகப்பெயர்.

levorphanol : லெவோர்ஃபனால் : நோவாற்றும் மருந்தாகப் பயன் படும் ஒரு செயற்கைப் பொருள். இதனை வாய்வழியாகவும் கொடுக்கலாம்.

Lewis blood group : லெவிஸ் குருதிக் குழுமம் : சிவப்புக் குருதியணுக்களின் காப்பு மூலம் இதனை ரெவிஸ் குறித்துரைத்தார். இது, எந்த நோயாளியின் குருதியில் தற்காப்பு மூலங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனவோ அந்த நோயாளியின் தற்காப்பு மூலங்களுடன் வினைபுரிகிறது.

Lewy bodies : லெவி உயிரணுத் : திரட்சி நிறமித் திரட்சியுடைய நரம்பு உயிரணுக்கள். இவை பார்க்கின்சன் நோயில் மூளையில் காணப்படும். ஜெர்மன் நரம்பியலறிஞர் ஃபிரடரிக் லெவி பெயரால் அழைக்கப்படுகிறது.

libido : உணர்ச்சி உந்துதல்; புலனுணர்வு நிறைவு; காம வேட்கை;