பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Libman-Sacks disease

641

ligament


விழைச்சு : பாலுணர்ச்சியின் உந்துதல், மனித நடத்தை முறையின் முக்கிய உந்துதலாகக் கருதப்படும் புலனுணர்வு.

Libman-Sacks disease : லிப்மன்-சாக்ஸ் நோய் : பாக்டீரியாவால் பரவாத பாலுண்ணி இதய உள்ளுறையழற்சி நோய். இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர்கள் இமானுவல் லிப்மன், பெஞ்சமின் சாக்ஸ் இருவரும் விவரித்துரைத்தனர்.

lichen : செம்பருக்கள் படை : சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய்வகை.

Lichtheim's syndrome : லிக்தைம் நோய் : முதுகுத்தண்டு ஒருங்கிணைந்து சீர்கெடும் நோய். இது கடும் குருதிச் சோகையுடன் இணைந்து காணப்படும். ஜெர்மன் மருத்துவ அறிஞர் லட்விக் லிக்தைம் பெயரால் அழைக்கப்படுகிறது.

lid-eye : கண்ணிமை.

lidocaine : லிடோக்கேய்ன் : லிக் னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

Lidothesin : லிடோத்தெசின் : லிக்னோக்கேய்ன் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

lienculus : துணை மண்ணிரல் : மண்ணிரலின் சிறிய துணை உறுப்பு.

lienitis : மண்ணிரல் வீக்கம்; கணைய அழற்சி.

lienorenal : மண்ணிரலுக்குரிய : மண்ணிரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான.

lite : உயிர்; வாழ்வு.

life, expectation : வாழ்நாள்.

life expectancy : ஆயுள்; வாழ்நாள் : மரணம் ஏற்படும் சராசரி வயது. இது சுகாதாரம், நோய் ஆகியவற்றினால் மட்டுமின்றி கல்வி, தொழில், சுற்றுச்சூழல் போன்ற சமூகக் காரணிகளினால் பாதிக்கப்படுகிறது.

life-strings : உயிர்நாடி : உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத மூலாதார நரமபு.

ligament : இணைப் பிழை; விதி; கட்டு நாண்; பிணையம் : எலும்புகளைப் பிணைக்கும்.