பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

lime water

Lioresa


lime water : எலுமிச்சை நீர்; சுண்ணாம்பு நீர் : சொறி, கரப்பான் மருந்தாகப் பயன்படும் கால்சியம் ஹைட்ராக்சைடு, எலுமிச்ச பழச்சாறு ஆளிவிதை அல்லது ஆலிவ் எண்ணெய் கலந்து இது பயன்படுத்தப்படுகிறது.

limitation : வரையறை.

limiting : அளவிலான.

limpid : தெளிவான.

limping : நொண்டுதல் : இயல்பு மீறி, வெட்டியிழுப்பு அசைவு களுடன் நடத்தல். வேதனை தரும் நைவுப் புண், உடல் திரிபு, கீழ் உறுப்பு, உடல், அடி வயிறு ஆகியவற்றில் சுருக்கம் அல்லது வாதம் ஏற்படுவதால் இது உண்டாகிறது.

Lincocin : லிங்கோசின் : லிங்கோமைசின் என்ற மருந்தின் வணிகப் பெயர்.

lincomycin : லிங்கோமைசின் : நோய்க் கிருமிகளினால் உண்டாகும் கடும் தொற்று நோய்களுக்கு எதிரான உயிர் எதிர்ப் பொருள்.

linctus : லிங்டஸ் : இனிப்பான கூழ் போன்ற திரவம். இதனைச் சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.

line : கோடு.

line, midsternal : மார் நடுக் கோடு.

linera, allex : வெண்கோடு.

linear : நேர்வான.

linan : துணி.

'lingulor : நாவடிவ.

linguantuliasis : லிங்குவான்டு லியாசிஸ் : லிங்குவான்டுலா என்ற கிருமியின் மூன்றாம் நிலை முட்டைப் புழுவினால் மனிதருக்கு உண்டாகும் தொற்று நோய். இதனால் தொண்டையில் வலி, அரிப்பு, எரிப்பு உண் டாகும். இது மூச்சுத் திணறல், தொண்டை அடைப்பு, வாந்தி ஆகியவற்றடன் சேர்ந்து ஏற்படும்.

lingua : நாக்கு; நா.

liniment : தேய்ப்புத் தைலம்; தைலம்; களிம்பு : கீல்வாத நோய்க்குரிய பூச்சித் தைல மருந்து போன்ற தேய்ப்புத் தைல வகை.

lining : ஒட்டுச் சவ்வு.

linkage : பிணைப்பு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள், ஒரே இனக்கீற்றில் ஒன்றோடொன்று மிக நெருக்கமாக இருத்தல். இது பெற்றோர் இடமிருந்து குழந்தைக்குப் பரவும்.

linolenic acid : லினோலெனிக் அமிலம் : தாவரக் கொழுப்புகளில் காணப்படும் இன்றிமையாத பூரிதமாகக் கொழுப்பு அமிலம்.

lint : கட்டுத்துணி.

Lioresa : லியோரெசால் : ஃபாக் பாக்லேஃபன் என்ற மருந்தின் வணிகப்பெயர்.