பக்கம்:மருத்துவ களஞ்சியப் பேரகராதி.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

liothyronine

644

lipofibroma


liothyronine : லியோதைரோனின் : கேடயச் சுரப்பியில் சுரக்கும் டிரை அயோடோத்தை ரோனின் என்ற சுரப்புநீர். இது தைராக்சினுடன் சேர்ந்து உடல் திசுக்களின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.

lip : உதடு; இதழ்.

lipaemia : மிகைக் குருதிக் கொழுப்பு; கொழு குருதி : இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருத்தல்.

lipase : கொழுப்புப் பகுப்புப்பொருள்; கொழு சிதை நொதி : கொழுப்பைப் பகுக்கும் செரிமானப் பொருள் (என்சைம்).

lipectomy : தடித்திசு அறுவை மருத்துவம் : தடித்த திசுக்களை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல்.

lipid : கொழுமம்.

lipiodol : லிப்பியோடால் : அயோடினேற்றிய எண்ணெயின் வணிகப் பெயர்.

lipo degstrophy : கொழுக் குலைவு.

lipoedema : உறுப்பு வீக்கம் : கொழுப்பு, திரவம் காரணமாக அடி உறுப்புகள் கடுமையாக வீக்கமடைதல்.

lipids : கொழுப்புகள் : நீரில் கரையாத கொழுப்புப் பொருள்களின் ஒரு குலுமம். இவை உடலில் சேகரித்து வைக்கப்பட்டு, சக்திக்காகப் பயன்படுத் தப்படுகிறது.

lipidosis : லிப்பிடோசிஸ் : மூளை, ஈரல், கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் கொழுப்புப் பொருள்கள் அளவுக்கு அதிகமாகச் சேர்வதற்கு வழி செய்யும் வளர்சிதை மாற்றக் கோளாறு. காஷர் நோய், டேய்-சாக்ஸ் நோய், நீமன்-பிக் நோய், போன்ற பரம்பரை நோய்கள் இதில் அடங்கும். இது பொதுவாக யூதர்களிடம் மறை நிலைக் கோளாறுகளாகக் காணப்படுகிறது. அறிவுக் குழப்பம், காக்காய் வலிப்பு, கண்குருடு ஆகியவற்றடன் சேர்ந்து இது ஏற்படும்.

lipochrome : லிப்போக்குரோம் : இயற்கையான, லிப்போஃபஸ் எபின், கரோட்டின்,இ லைக்கோபென் உள்ளடங்கலாக கொழுப்பு கரையக் கூடிய நிறிமிக்கான இனப் பொதுப் பெயர்.

lipocrit : லிப்போக்கிரைட் : குருதியிலுள்ள அல்லது பிற உடல் திரவத்திலுள்ள கொழுப்புப் பொருளைப் பிரித்தெடுக்கவும், பகுப்பாய்வு செய்யவும் பயன் படுத்தப்படும் ஒரு சாதனம்.

lipofibroma : இழைமத் திசுக் கட்டி : மிகப்பெருமளவு கொழுப்பு உயிரணுக்களுடன்